பக்கம்:குமரப் பருவம்.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

52 குமரப் பருவம் மிக்க சக்திகள் சில இருக்கின்றன என்பது மனத்தத்து வர்கள் கண்டி உண்மை. அவற்றிற்கு உந்தல்கள் (Urges) என்று பெயர். இந்த உந்தல்களிலே இனப் பெருக்கத்திற் கான உந்தலைப் பாலுந்தல் (Sex Urge) என்பர். இது மிக வலிமை உடையது. பாலுந்தலுக்குப் பிராய்டு போன்ற மனப்பகுப் பியலார்கள் மிக முக்கிய இடம் கொடுக்கிரு.ர்கள். மனத் திலே இரண்டு முக்கியமான பகுதிகள் உண்டென்றும். அதிலே வலிமைமிக்க பகுதியான அடிமனம் மறைந்திருக் கிறதென்றும் இப்பொழுது கண்டிருக்கிருர்கள். இந்த அடிமனத்தைப் பற்றி முக்கியமாக ஆராய்கின்றவர் களுக்கு மனப் பகுப்பியலார் என்று பெயர். (மனமெனும் மாயக் குரங்கு என்ற நூலில் இதைப்பற்றி விரிவாகத் தெரிந்துகொள்ளலாம்.) பிராய்டுதான் இ ந் த த் துறையிலே முதல் முதலாக விரிவாக ஆராய்ச்சி நடத் தியவர். அவர் பாலுந்தலே வாழ்க்கையின் போக்குக்கு அடிப்படையென்று கருதுகிருர், பாலுந்தல் குமரப் பருவத்திலே ஓங்கத் தொடங் குவது இயல்பு. இனப் பெருக்க உறுப்புக்களும் அப் பருவத்திலே ஏற்ற பக்குவம் அடைகின்றன. ஆண்-பெண்களுக்கிடையே இ ய ல் பா க அன்பு வளர்ந்து அது மணவாழ்க்கைக்கு அடிப்படையாக அமைய வேண்டும். அவ்வாறு அமைந்தால் அது ஆரோக்கிய மான வாழ்க்கைக்கும் காரணமாகும். விரும்பத்தகாத கிளர்ச்சிப் போராட்டங்கள் மனத்திலே எழவும் அப் பொழுது வழியில்லை. அவற்றை அட்க்கி வைக்க வேண்டு மென்ற தேவையும் ஏற்படாது. ஆண்-பெண் உறவுபற்றியும், இனப்பெருக்க உறுப் புக்கள் பற்றியும் அறிந்துகொள்ள வேண்டுமென்ற ஆசை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குமரப்_பருவம்.pdf/53&oldid=806609" இலிருந்து மீள்விக்கப்பட்டது