பக்கம்:குமரப் பருவம்.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புதிய கிளர்ச்சிகள் 53 குமரப் பருவத்திலே மிக அதிகமாக இருக்கின்றது. இந்த ஆசை முன்னலும் இல்லாமலில்லை. வயதுக்கு ஏற்ற வாறு அவற்றைப் பற்றியெல்லாம் விஞ்ஞான முறையிலே விளக்கிச் சொல்லுவது நல்லது என்பது அறிஞர்களிற் பெரும்பாலோருடைய கருத்து. இதைப்பற்றிச் சொல்லிக் கொடுக்க வேண்டியதே இல்லையென்ற கருத்து இருக்கிற்து. விந்துவின் உற்பத்தியைப்பற்றியும், அது குமரப் பருவத்திலே உடல் வளர்ச்சிக்கு எவ்வாறு உதவுகின்றது என்பது பற்றியும், சிறப்பாக மூளையை வளர்ப்பதற்கு அதன் பயன் பற்றியும் குமரனுக்குத் தெரிந்திருத்தல் அவசியம். இயற்கைக்கு மாருன வழிகளில் விந்துவை வீனக்கு கிறவர்கள் அந்த விந்தை இழப்பதால் தீங்கடைவதில்லை யென்றும். ஆனால், தவருன செயல் செய்வதாக அதைப் பற்றி மனத்திலேயே எண்ணி எண்ணிக் கவலைப்படுவ தாலேயே அதிகம் தீமையடைகின்றனர் என்றும் வைத் தியர்களும் மனத்தத்துவர்களும் உறுதியாகக் கூறு கிருர்கள். பெரிய அளவிலே விந்துவை வீணுக்குவதே பாதிக்கும்என்றும் கூறுகிருர்கள். இன்று கிடைக்கும் இன்பம் நாளே கிடைக்கப் போகும் இன்பத்தைக் குலைப்பதாக இருக்கக்கூடாது என்று கூறும் சீனப் பழமொழி ஒன்று உண்டு. இயற் கைக்கு மாறுபட்ட முறைகளால் விந்துவை வெளிப் படுத்துவதால் கிடைக்கும் இன்பத்தைவிடப் பன்மடங்கு பெரியது மணவாழ்வில் ஈடுபடுகின்றபோது கிடைக்கும் இன்பம். அதற்குரிய காலம் வரும்வரை அடங்கியிருக்கக் கற்றுக்கொள்ள வேண்டும். அதனால் பல நன்மைகள் உண்டாகின்றன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குமரப்_பருவம்.pdf/54&oldid=806611" இலிருந்து மீள்விக்கப்பட்டது