பக்கம்:குமரிக்கோட்டம், அண்ணாதுரை.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சி.என். அண்ணாதுரை

25


மாலைகள். பழனியின் மடியில் மலர்ந்த தாமரை போன்ற முகம், அதிலே ரோஜா போன்ற கன்னம், முத்துப் பற்கள், அவைகளைப் பாதுகாக்கும் பவள இதழ், பவுன் நிற மேனி,........ ஏழ்மை, ஆனால், கொள்கையின் படி வாழ்வு அமைந்ததால் இன்பம் அங்கே. செல்வம். ஆனால் மனம் பாலைவனம், செட்டியார் வீட்டில்.

II


பழனி பராரியாகி, சோற்றுக்கே திண்டாடி, மனைவியால் வெறுக்கப்பட்டுத் தன் வீட்டு வாயிற்படிக்கு வந்து நின்று, "அப்பா! புத்தியில்லாமல் ஏதோ செய்துவிட்டேன், பொறுத்துக் கொள்ளுங்கள்" என்று கெஞ்ச வேண்டும், சீ நீசா! என் முகத்தில் விழிக்காதே! உன்னைக் கண்டாலே நரகம் சம்பவிக்கும்" என்று ஏசவேண்டும்; பழனி கதறவேண்டும்; பிறகு அவனை மன்னித்து உள்ளே சேர்த்துக்கொள்ள வேண்டும்; இதுவே செட்டியாரின் நித்யப்பிரார்த்தனை. எந்தத் தெய்வத்திடம் மனுச்செய்தும், மகன் வாயிற்படி வரவும் இல்லை, வறுமையால் தாக்கப்பட்டதற்காக, மனம் மாறினதாகவும் தகவலில்லை.

"கை கோத்துக் கொண்டு கலகலவென்று சிரித்துக் கொண்டே போனார்கள்."

"பழனி, ராஜாபோலத்தான் இருக்கிறான்."

"ரொம்ப அழகாகப் பேசுகிறான்."

"நேற்றுக் கூட்டத்திலே கல் விழுந்தபடி இருந்தது; பழனி கொஞ்சம்கூடப் பயப்படாமல், பேசிக்கொண்டே இருந்தான்" என்றெல்லாம் செய்திகள் வந்த