பக்கம்:குமரிக்கோட்டம், அண்ணாதுரை.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சி.என். அண்ணாதுரை

29


தொட்டால் போதும் என்று தோன்றுகிறது; கிட்டே போனாலோ, நெருப்பு; நெருப்பிடம் போவதுபோலச் சீறிவிழுகிறாளே, இப்படி ஒருத்தி இருப்பாளா?" என்று பலபேர் தோல்விக்குப் பிறகு பேசிக் கொள்வார்கள். குமரிக்கு, அங்கிருந்தவர்களின் சுபாவம் நன்றாகத் தெரியும். தன்னைப் பாதுகாத்துக் கொள்ளும் வழியும் தெரியும். அதற்காக வேண்டி, யாருடனும் பழகாமலும் இருக்க மாட்டாள்.தாராளமாகப் பழகுவாள்; ஆனால் "கெட்ட பேச்சு வரும் என்று தெரிந்தால் போதும், வெட்டி விடுவாள். காற்றிலே அலையும் ஆடையைச் சரிபடுத்த நிற்பாள்; குறும்புக்காரரின் கண்கள் தன் மீது பாய்வதைக் காண்பாள், முகத்தை எட்டுக்கோணலாக்கிக்காட்டுவாள். அண்ட முடியாத நெருப்பு அவள். அவள் அண்ணனோ, மகா கோபக்காரன். குமரியைக் கலியாணம் செய்து கொள்ள வேண்டும் என்ற நாணயமான கருத்தைக் கொண்டவர்கள்கூடச் சொக்கனிடம் (குமரியின் அண்ணனிடம்) கேட்கப் பயப்படுவார்கள். தாய்தந்தை இருவரும் இல்லை. தங்கைக்கு அண்ணன் துணை, அண்ணனுக்குத் தங்கை துணை. இருவருக்கும், ரோஷஉணர்ச்சியே பலமான கவசம்.

குமரி, வேலை செய்யுமிடந்திலே இருந்தவர் அனைவரையும் 'எடை போட்டுவிட்டாளே தவிர, செட்டியாரை அவள் சரியாக எடைபோட வில்லை. பாவம், பெரிய மனுஷர், மெத்தாதி, உபகாரி, ஏழைகளிடம் இரக்கம் உள்ளவர், என்றுதான் குமரியும், மற்றவர் களைப்போலவே, அவரைப்பற்றித் தெரிந்திருந்தாள். மற்றவர்களிடம் பேசுவதைவிட, அவரிடம் கொஞ்சம்