பக்கம்:குமரியின் மூக்குத்தி.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

குமரியின் மூக்குத்தி 5

அதன்படி கடக்கும் கடமையை நான் எப்போதும் மேற் கொண்டிருக்கிறேன். அப்படி இருக்க, இதைத் தெரிந்து கொள்ளக் கூடாதபடி நான் என்ன அபராதம் செய்து விட்டேன்' என்றான் தொண்டைமான். -

'சொல்லக் கூடாது என்பது இல்லை. மிகச் சிறிய பண்டத்தைப்பற்றிய கவலே அது, பண்டம் சிறியது தானே என்று நான் அலட்சியமாக இருந்தேன். ஆனல் கவலை பெரிதாகி இப்போது விரிந்துவிட்டது.” . . . .

"அப்படி என்ன, கிடைக்காத பண்டம் அது?" "சொல்கிறேன் கேள். நம்முடைய பட்டத்துத் தேவிக்குத்தான் அதிகக் கவலே. ஊணும் உறக்கமும் இன்றி அவள் படுகிற துன்பத்தைப் பார்க்க முடியவில்லை. இவ் வளவுக்கும் காரணம் ஒரு சிறிய மூக்குத்திதான்.”

'என்ன வெறும் மூக்குத்திக்காகவா மன்னர் பெருமா னும் மாபெருந் தேவியும் கவலைப்படுவது!" என்று திடுக் கிட்டுக் கேட்டான் கருணாகரத் தொண்டைமான். s'

'மூக்குத்தி சிறியதுதான். ஆனல் அது கிடைக்க முடியாத இடத்தில் இருப்பதால் அதைப்பற்றிய கவலை அதிக மாக வளர்கிறது.' . . . .

"நம்முடைய நாட்டில் கிடைக்காத வைரமா? அல்லது வேற்று நாட்டில் கிடைப்பதாக இருந்தாலும் இங்கே வரு விக்க முடியாதா?" . . .

"வைரத்தைச் சொல்லவில்லை. ஒரு பெண்மணியின் மூக்கில் இருந்து அது ஒளிர்கிறது. அது வேண்டுமென்று கேட்கிறாள் தேவி.' . . . ."

" இதில் என்ன ஆச்சரியம்? பட்டத்தரசி யாருக்கு இல்லாத முக்குத்தி யாருக்கு வேணும்? அது எங்கே இருந்தாலும் தேடிப் பிடித்து வாங்கி வந்து விடலாமே." . . . . . - - கலிங்க அரசன் அனந்தபதுமனுடைய தேவியின் மூக்கில் இருக்கிறது அது. அவன் சில மாசங்களுக்கு முன்பு