பக்கம்:குமரியின் மூக்குத்தி.pdf/115

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஜடைபில்லை

109என்ற பேச்சுக்கே இடமில்லாமல் ஜடைபில்லை செய்து விட்டது.” .

“"அப்புறம்?’”

"அப்புறம் என்ன? கல்யாணத்தன்று பார்த்தால் இவள் தலையில் காகிதப்பூ மாதிரி புதுக் கல் பில்லை ஒன்று உட்கார்ந்திருந்தது. எனக்குப் பெரிய ஏமாற்றமாகி விட்டது. எப்படியாவது அதை அடைய வேண்டுமென்ற ஆத்திரத்தில் தடபுடல் படுத்திவிட்டேன். நீங்கள் மனசு வைத்தீர்கள்.”

'“அந்த ஜடைபில்லை எங்கே?””

"அதைத்தான் சொல்ல வருகிறேன், அம்மா. கல்யாணம் ஆனவுடன் நேரே வரதராஜப் பெருமாள் கோயிலுக்குப் போனேன். நகையை அழுக்கெடுத்துச் சுத்தம் பண்ணி மெருகேற்றியிருந்தேன். தாயார் இழந்த ஜடைபில்லை மறுபடியும் கிடைத்துவிட்டதுபோல யாவரும் மகிழ்ந்தார்கள். நான் தாயாருக்கே அதைச் சமர்ப்பித்துவிட்டேன். அது இனித் தெய்விக நகை ஆகிவிட்டது, அம்மா. புண்ணியமெல்லாம் உங்களைச் சேர்ந்தது.”

அவன் இதைச் சொல்லிவிட்டு ஒரு பெருமூச்சு விட்டான். அதன் எதிரொலிபோல என்னிடமும் நீண்ட பெருமூச்சு எழுந்தது. -