பக்கம்:குமரியின் மூக்குத்தி.pdf/117

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பெண் உரிமை

111இரவும் பகலும் ஜபிக்கிறாயே, அது கூடாது என்பதை எவ்வளவு அழகாக எழுதியிருக்கிறார், இந்த எழுத்தாளர்' 'அவனுக்கு நான் சொல்கிறது எப்படியடி தெரியும்?" என்று அம்மா கேட்டாள்.

கல்யாணி, ஐயோ, அம்மா' என்று சொல்லிச் சிரித்தாள். 'கதையில் உன்னைப்பற்றி வரவில்லை, அம்மா; பெண்கள் அவசியம் கல்யாணம் பண்ணிக்கொள்ளத்தான் வேண்டும் என்று உன்னைப்போன்ற கர்நாடகங்கள் சொல்கிறார்களே, அதற்குத் தக்க பதில் இந்தக் கதையில் வருகிறது. அதைத்தான் சொல்கிறேன்' என்றாள். -

"அது என்னடி அதிசயம்? பெண்களுக்குக் கலெக்டர் உத்தியோகம் கொடுக்க வேண்டும் என்று எழுதியிருக்கிறானா? இல்லை, கன்யாமாடம் கட்டவேண்டும் என்று எழுதியிருக்கிறானா?” -

"கவர்னர் உத்தியோகம் கொடுக்க வேண்டுமாம்!'

"எழுதினது ஆண்பிள்ளையா? பெண்பிள்ளையா?"

"யாராக இருக்கும் என்று உனக்குத் தோன்றுகிறது?

'யாரோ பொழுது போகாமல் புக்ககத்தில் விழுந்து தத்தளிக்கிற பைத்தியக்காரப் பெண்ணாக இருக்கவேண்டும்..” என்றாள் அம்மா, -

அவள் சோதிடம் பொய்த்துவிட்டது. '

இல்லை, அம்மா, இல்லை. சாட்சாத் ஆண்சிங்கம் ஒன்று எழுதியிருக்கிறது. சுந்தரேசன் என்று கொட்டை எழுத்தில் பெயர் போட்டிருக்கிறது."

"என்ன எழுதியிருக்கிறான் படி, பார்க்கலாம்.

கல்யாணி கதையில் வரும் பகுதியைப் படிக்க ஆரம்பித்தாள். அம்மா ஏதோ கேள்வி கேட்கவே, கதையில் வரும் சந்தர்ப்பத்தை விளக்கினாள். "இதிலும் கல்யாணி என்ற பெண்ணை வைத்துத்தான் கதை எழுதியிருக்கிறார். சீக்கிரம் அவளைக் கல்யாணம் பண்ணிக்கொள்ள வேண்டும் என்று அவளுடைய மாமா பிள்ளை சொல்கிறான்.