பக்கம்:குமரியின் மூக்குத்தி.pdf/132

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

126

குமரியின் மூக்குத்திமற்றொரு நாள் தங்கவேலன் கடைக்கு ஏதோ சாமான் வாங்கிவரப் போனான். நடுவிலே ஒர் ஆள் அவனைச் சந்தித் தான். தம்பி, நீதான் அந்தக் கீழ்க்கோடிப் பங்களாவில் வேலைக்கு வந்திருக்கிறாயோ?” என்று கேட்டான்.

"ஆம், நீங்கள் யார்?' என்று தங்கவேலன் கேட்டான்.

'நான் ஓர் அச்சாபீஸில் காவல்காரனாக இருக்கிறேன். சும்மாதான் கேட்டேன். இதற்குமுன் இருந்த தோட்டக்காரக் கிழவனை எனக்குப் பழக்கம் உண்டு. ஏன் தம்பி, உனக்குச் சொந்த ஊர் எது?”

'ஆரணி.”

சாதிசனம் எல்லாரையும் விட்டுவிட்டு இந்தப் பட்டணத்துக்குப் பிழைக்க வந்துவிட்டாயா?"

சாதி சனம் சோறு போடுவார்களா? பட்டணத்திலே தான் உழைப்புக்குப் பலன் கிடைக்கிறது” என்று தங்கவேலன் சொன்னான்.

இப்படியே அவ்விருவரும் பேசி ஒருவரை ஒருவர் அறிமுகம் செய்துகொண்டார்கள். அவனுக்குமுனிசாமி என்று பெயர். ஓர் அச்சுநிலையத்தில் காவலாளி. இரண்டு பேரும் ஒரே சாதி. ஒரு விதத்தில் பார்த்தால் முனிசாமிக்கும் தங்க வேலனுக்கும் பாத்தியம்கூட இருக்கும்போல இருந்தது.

தெருவிலே உண்டான இந்தப் பழக்கம் நீடித்தது. முனிசாமி அடிக்கடி தங்கவேலனேடு பழகினான். ஒருநாள் அவன் மெல்ல ஒரு கேள்வியைக் கேட்டான். 'தம்பி, உன் வயசிலே நான் ஒரு பெண் குழந்தையைப் பெற்றுவிட்டேன். நீயும் ஒரு கல்யாணம் பண்ணிக்கொண்டு வாழக் கூடாதா?” என்று கேட்டான்.

"அதற்குள்ளேயா?” என்று தங்கவேலன் ஆச்சரியம் அடைந்தவனைப் போல எதிர்க்கேள்வி கேட்டான். -

"ஏன் தம்பி, உனக்கு இருபத்தைந்து இருபத்தாறு வயசு இருக்கும்போலே இருக்கிறது. இந்த வயசில்தான் கல்யாணம் கட்டிக் கொள்ளவேண்டும். வெட்கப்படாமல்