பக்கம்:குமரியின் மூக்குத்தி.pdf/141

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

புதிய வீடு

135



பதினெட்டாம் பெருக்கன்று வெள்ளம் பதினெட்டாம் படியைத் தொட்டுக் கொண்டு போகும்.

மாரப்பக் கவுண்டன் நல்வி பாளையத்தில் நாட்டாண்மைக்காரன்; பெரிய பண்ணைக்காரக் கவுண்டன்; அந்த ஊர் ராஜா அவன்தான். அவனைக் கண்டால் ஊராருக்கு ஒரு தனி மரியாதை. யாராவது பேசிக்கொண்டிருப்பார்கள். "என்னப்பா லவுஸ்- போடறே?" என்று அவன் குரல் கொடுப்பான். பேச்சுக் கப்சிப் என்று அடங்கிவிடும். அவனுக்கு முன் யாரும் சக்காந்தம் பண்ண மாட்டார்கள். யார் வீட்டில் மொய் எழுதினாலும் அவன் அஞ்சு ரூபாய்க்குக் குறைவாக எழுதமாட்டான்.

அவனுக்குக் குமரீசுவரிடமும் காவிரித் தாயிடமும் அளவில்லாத அன்பு வருஷத்துக்கு ஒரு தடவை பதினெட்டாம் பெருக்குக்கு மோகனூர் போவதோடு அவன் நிற்பதில்லை. மற்ற நாட்களிலும் நினைத்தால் போய்க் காவிரியில் ஒரு முழுக்குப் போட்டுவிட்டு வருவான்.

காலையில் எழுந்தால் காட்டுக்குப் போவான். சரியான படி மழைபெய்து விளைந்தால் கரைவழி விளைச்சல் என்னத்துக்கு ஆகும்? “'காட்டு வெள்ளாமை எக்கச்சக்கமாக வெளைஞ்சால் கரைவழி வெள்ளாமை என்ன செய்யும்?”" என்பான் கவுண்டன்.

புன்செய் நிலங்களைக் காடு என்று சொல்வது அந்தப் பக்கத்து வழக்கம். யாரோ தஞ்சாவூர்க்காரர் ஒரு நாள் நல்விபாளையம் வந்திருந்தார். அவருக்கு அந்த ஊர்ப் பேச்சு விளங்கவில்லை. கவுண்டர் எங்கே?' என்று கேட்டார். காட்டுக்குப் போய்விட்டார்” என்று பதில் கிடைத்தது. "காடு வா வா என்கிறது, வீடு போ போ என்கிறது' என்ற பழமொழி அப்போது அவர் நினைவுக்கு வந்தது. காட்டுக்கா? இந்த அம்மாள் என்ன சொல் கிறாள்?' எனத் தயங்கினர். மறுபடியும், "எங்கே' என்று கேட்டார். "காட்டுக்கு" என்றே விடை வந்தது. அவர்