பக்கம்:குமரியின் மூக்குத்தி.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

10

குமரியின் முக்குத்தி

"சோழ நாட்டில் தங்கினீர்களோ?" "ஆம், தஞ்சையில் சோழ மன்னருடைய அரண்மனையில் தங்கினேன்." "சரி, வைரம் விதைத்தாகி விட்டது. இனி அறுவடையாக வேண்டிய காலம் எப்போது வருகிறதோ?" என்றான் கருணாகரன். "என்ன ஐயா, பயமுறுத்துகிறீர்?" "ஒருகால் இந்த மூக்குத்தியைச் சோழ மன்னர் விரும்பினாலும் விரும்பலாம். முடியுடை மன்னர்களின் அரண்மனையில் இருக்கும் தகுதி இதற்கு இருக்கிறது. மற்ற இடங்களில் இருந்தால் இது நெருப்புக்குச் சமானம். இதை அத்தகைய இடத்தில் சேர்ப்பித்து விடுவதே நல்லது” என்று தொண்டைமான் சொன்னபோது அரசனுக்கும் அவனைச் சார்ந்தவர்களுக்கும் வைர வியாபாரியிடமே சந்தேகம் பிறந்துவிட்டது.

ஒர் அமைச்சன் தொண்டமானைஅழைத்துச் சென்றான். சோழ நாட்டிலிருந்து வந்த ஒற்றன் என்று எண்ணியதால் ஏவலரைக் கொண்டு எச்சரிக்கை செய்துஅனுப்பினான். அடி படாமல் தப்பியது பெரிதாகப் போய்விட்டது.

வெறுங் கையோடு வீடு வந்துசேர்ந்தான் கருணாகரன். அடிபட்ட புலிபோல அவனுக்கு அனந்தபதுமன்மேல் சினம் மூண்டது. சோழ அரசனுடைய ஒற்றன் தன்னை அவமதித்ததாக எண்ணிய அனந்தபதுமன், தான் கட்ட வேண்டிய கப்பத்தை அனுப்பவில்லை. கருணாகரத் தொண்டைமானின் அறிவுரையின்படி சோழனிடமிருந்து ஓர் ஒலைஅவனுக்குப் போயிற்று.

"உன் மனைவியின் மூக்குத்தியைக் கொடுத்தால் எப்போதுமே நீ கப்பம் கட்ட வேண்டியதில்லைை" என்று சொல்லியது அந்த ஓலை.

அது கண்டு அனந்தபதுமன் சீறினான். முடியாது என்று சொல்லி அனுப்பிவிட்டான். அப்புறந்தான்