உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:குமரியின் மூக்குத்தி.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

40

குமரியின் மூக்குத்தி

அவள் கடிக்காத பழம்அவனுக்குஇனிக்குமா? அவள் அந்தக் குறைக்கனியைக் கடித்துண்டு பின்னும் குறையாக்கினாள். அதை அவன் சட்டென்று பிடுங்கி உண்டான். இருவரும் காடே அதிரும்படி சிரித்தார்கள்.

தேவலோக வாசிகளுக்குக்கூட இந்தஇன்பம் கிடைக்காதே!

தேவர்கள் அவர்களைக் கண்டு கண்போட்டு விட்டார்களோ? மாசுமறுவற்று விளங்கிய அவளுடைய உடம்பில் ஏதோ கோளாறு உண்டாயிற்று.அவனோடுஅவளால்வெளியே வர முடியவில்லை.இன்றியமையாத காரியங்களுக்கு மாத்திரம் அவன் வெளியே போய் வந்தான். அப்போதெல்லாம் அருவி முன்போலக் குளிர்ச்சியாக இல்லை. மலர்கள் மணம் வீசவில்லை. பறவைகளின் குரல் கவர்ச்சியாக இல்லை. உலகமே அவனுக்குச் சுவைக்கவில்லை. காய் கனிகள் கொண்டு வந்து மெல்லிக்கு ஊட்டுவான். அவள் சிறிதளவு உண்பாள். ஆனால் உடனே வாந்தி எடுத்து விடுவாள். அவளுக்கு என்ன நோய்? அவனுக்கு விளங்க வில்லை.

கடைசியில்......!

ஆம்; மெல்லத் தன் முருகனைப் பிரிந்து சென்றுவிட்டாள். அவள் மெலிந்த உடல் கீழே கிடந்தது. அதை அவன் புரட்டிப் புரட்டிப் பார்த்தான். கையை எடுத்தான். அது விறைப்பாக இருந்தது.அவள் கண் நட்டுப் போயிற்று. அது இருதயத்தை வெளிப்படுத்தும் மொழியைப் பேசவில்லை. இருதயமே நின்றுவிட்டபோது இனி எப்படி ஒலிக்கும்? அவன் அவள் உடம்பைக் கட்டிக் கொண்டு அழுதான்.ஆயுளில்அப்போதுதான் அழுகிறான். முகத்தோடு முகத்தைத் தேய்த்துக்கொண்டான்.எத்தனை இன்பமாக, வெதுவெதுப்பாக அம்முகம் இருக்கும்! இப்போது அதில் ஒன்றுமே இல்லை; சில்லிட்டிருந்தது. அவனுக்கு ஒன்றுமே தோன்றவில்லை. அந்த உடம்பு