உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:குமாஸ்தாவின் பெண், அண்ணாதுரை.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

குமாஸ்தாவின் பெண்

19



தொங்குகிறபோது, தேன் கூட்டிலிருந்து துளி தேன் சொட்ட அதைச் சுவைத்துச், சந்தோஷப்பட்டான் என்று கதை சொல்வார்களே அதைப் போலிருக்கிறது எனது சந்தோஷம்.

"காந்தா, கேட்டாயோ சங்கதி? இன்னிக்கு சுந்தரம் உங்க அக்காவுக்கு ஏன் இன்னும் கலியாணம் ஆகவில்லை என்று கேட்டான்" என்று சாந்தா கூறினாள் ஒரு நாள். நான் புன்சிரிப்பை அடக்கிக் கொண்டு ஏதோ வேலை செய்வதைப் போல் இருந்து விட்டேன். 'நீ என்ன பதில் சொன்னே' என்று அம்மா ஆவலுடன் கேட்டார்கள்.

"இன்னும் நல்ல இடம் கிடைக்கவில்லை, என்று சொன்னேன்" சாந்தா கூறினாள்.

"குட்டி பிகுவோடுதான் பேசியிருக்கா" என்று அம்மா கூறிவிட்டு சிரித்துக் கொண்டே என்னைப் பார்த்தார்கள்.

"சதா அவா ஆத்திலே உனக்கு என்னடி வேலை" என்று நான் சாந்தாவைக் கேட்டு அதட்டினேன்.

"அது யார் வீடு? அலமு அத்தை வீட்டுக்கு நான் போகாமே வேறே யார் போவா?" என்று கம்பீரமாகக் கேட்டாள் சாந்தா.

"அவா உன்னை அழைக்கிறாளோ தாம்பூலம் வைத்து" என்று நான் கேலி செய்தேன்.

"தாம்பூலம், மேளதாளம், சீர்செட்டு, வரிசை எல்லாம் வைத்து உன்னை அழைக்கப் போறாளே அலமு அத்தை, அப்போது செய்யம்மா அதிகாரம்" என்று சாந்தா பதிலுக்குக் கேலி செய்ய ஆரம்பித்தாள்.

"வர வர நீ துஷ்டையாகிறாய்" என்று கூறிக்கொண்டே சாந்தாவைப் பிடித்திழுத்து கன்னத்தைத் திருக எண்ணினேன். அவள் என் பிடிக்கா அகப்படுவாள்! ஒரே ஓட்டமாக ஓடிப்போய் அலமு வீட்டிலே புகுந்து கொண்டாள். பார்க்கிறேன் நான், சாந்தா சோமுவிடம் ஏதோ பேசிக்கொண்டு விழுந்து விழுந்து சிரிக்கிறாள்.

காதல் விஷயமாக நான் பல கதைகளில் படித்திருக்கிறேன். துஷ்யந்தன் சகுந்தலையைக் கண்டகதை, நளதமயந்தி கதை, இராமச்சந்திரன் சீதாபிராட்டியார் கதை,