உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:குமாஸ்தாவின் பெண், அண்ணாதுரை.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

குமாஸ்தாவின் பெண்

23



சாந்தா குறும்புத்தனமாக ஒரு வேலை செய்து விட்டாள் என்பது எனக்கு பிறகே தெரியவந்தது. கண்ணபிரான் என்பதை அடித்து விட்டு சோமு என்று அவள் எழுதிவிட்டு, பிறகு புத்தகத்தை சோமுவிடம் கொடுத்தாளாம். கொடுக்கும்போது, "இந்தப் புத்தகம் ரொம்ப நன்றாக இருந்ததாம், அக்கா படித்து விட்டு முக்கியமான இடத்திலே கோடு போட்டு இருக்கிறாள்" என்றும் சொன்னாளாம். சோமு புன்னகையுடன் "சாந்தா நல்ல புத்திசாலியல்லவா பரம சாது! பகவத்கடாட்சம் அவளுக்குக் கிடைக்கும். புண்ணிய கதைகளைப் படிப்பதிலே அவளுக்கு விருப்பம் இருப்பதால் அவள் நல்ல குணவதியாக விளங்குவாள்" என்று கூறினாராம்.

"புத்தகத்தைப் புரட்டிப் பார்த்தாராடி?" என்றுநான் ஆவலுடன் கேட்டேன். புத்தகத்தைப் பார்த்து விட்டு, விஷயம் தெரிந்து கொண்டு, சோமு தன் சம்மத்த்தைக் கூறியனுப்பினார் என்று பேதை நான் எண்ணிக் கொண்டேன்.

"புத்தகத்தைப் பிரித்து பார்க்கவில்லையே, அக்கா" என்று சாந்தா சோகத்துடன் கூறிவிட்டு. "நான் வந்து விட்ட பிறகு நிச்சயம் பார்த்திருப்பார்" என்று என்னைத் தேற்றினாள். சாந்தா தேற்றிவிடக் கூடிய நோயா எனக்கு! என் மருந்து எதிர் வீட்டில். என் நோய், அவருக்குத் தெரிந்தால்தானே!!

தம்பி இராகவன் சோமுவிடம் நெருங்குவதில்லை. காரணம், இராகவனுக்கு நல்லவர்களே பிடிப்பதில்லை. சோமு எப்படியாவது இராகவனைத் தோழனாக்கிக் கொள்ள வேண்டுமென்று, இராகவன் இருக்கும் நேரத்தில், சில நாட்கள் எங்கள் வீட்டுக்கு வருவதுண்டு, பேசுவதுண்டு. பேச்சு சுவாரஸ்யமாக இருக்கும். எனக்கு நல்ல விருந்து. ஆனால் இராகவன் கண்டிப்பாய் பேசுவான்.

நான் பாரதத்தில் கோடிட்டு அனுப்பியதற்குச் சில நாட்களுக்குப் பிறகு இராகவன் ஒரு தினம் களைத்து வந்து கன்னத்தில் கை வைத்துக்கொண்டு உட்கார்ந்தான். வறுமையினால் வாடும் வாட்டம் எனக்கிருப்பதைவிட