உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:குமாஸ்தாவின் பெண், அண்ணாதுரை.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

குமாஸ்தாவின் பெண்

25



ஒருநாள். சோமுவுக்கும், இராகவனுக்கும் கீழ்க்கண்ட படி பேச்சு நடந்தது.

சோமு : இராகவா! எங்கே உன்னைக் காண்பதே
அரிதாகி விட்டது?

இராகவன் : கழுதை கெட்டால் குட்டிச்
சுவற்றிலேதானோ சாக்கடைக்குப் போக்கிடமேது?
வேலை ஏதாவது கிடைக்குமோ என்று தேடி
அலைந்தேன்.

சோமு : கிடைத்ததோ?

இராகவன் : நன்றாகக் கிடைத்தது. டாமிட், இடியட்
என்ற அர்ச்சனை. வேலையாவது கிடைப்பதாவது.
புலிப்பாலில் குதிரைக் கொம்பை தேய்த்து அந்தத்
திலகத்தை நெற்றியிலே வைத்துக் கொண்டு வந்தால்
கிடைக்குமாம்!

சோமு : காலம் இப்படியே இராது இராகவா! பகவான்
கிருபை செய்யாமற் போக மாட்டார்.

இராகவன் : அது சரி அண்ணா! கிருபை பண்ணுவார்.
ஓய்வு இருந்தால்தானே! தேரும், திருவிழாவும் வேத
பாராயணமும், பஜனையும், கதா காலட்சேபமும், பரத
நாட்டியமும், அதிர்வெடியும், அக்காரவடிசலும்,
அன்னாபிஷேகமும், விடாயத்தியும் அனுபவித்துவிட்டு,
மிகுந்த நேரத்தில், உம்மைப் போன்ற 'பக்தர்'களைக்
கண்டு பேசிக் கடாட்சித்து விட்டுப் பிறகுதானே
என்னைப் போன்ற பஞ்சையிடம் வருவார். அதற்குள்
எனக்கு வேலையே அவசியமில்லாத நிலைமை வரும்.
சாவுதான் அவர் எனக்குச் செய்ய வேண்டிய கடாட்சம்.

சோமு : மனம் வெறுத்துப் பேசாதே இராகவா. இது
ஒரு கஷ்டமா? சாட்சாத் ஸ்ரீராமரே காடு சுற்றினார்.
கஷ்டமும் சுகமும் இரவும் பகலும் போல மாறி
மாறித்தான் வரும். இதற்காக பகவத் நிந்தனை
செய்வதா?

இராகவன் : நானா நிந்திக்கிறேன்? என்ன அண்ணா,
உம்மைப் பெரிய வேதாந்தி என்று கூறுகிறார்களே.
நான் பேசுகிறேன், நான் ஏசுகிறேன் என்று