உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:குமாஸ்தாவின் பெண், அண்ணாதுரை.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

குமாஸ்தாவின் பெண்

27



"எண்ணாத எண்ணமெல்லாம்
எண்ணி எண்ணி
எட்டாத கோட்டைக்கு
ஏணியிட்டு"

என்று இராகவன் பாடிக் கொண்டே சிரித்தான்.

எனக்குச் சோமுமீது இருக்கும் எண்ணத்தை இராகவன் எப்படியோ தெரிந்து கொண்டான் என்பது தெரிந்தது. நான் நாணத்தால் தலை குனிந்தேன். "அழகுக்குத் தக்கயோகம் அடிக்க வேண்டும்" என்று குறும்பு பேச ஆரம்பித்தான் இராகவன்.

புன்சிரிப்புடன் நான் இராகவனை முறைத்துப் பார்த்தேன்! 'இந்தப் பார்வைக்கே அவன் உன்னைத் தான் பட்ட மகிஷியாக்கிக் கொள்ளலாம்' என்று இராகவன் கூறினான்.

"இராகவன்! வம்புத் தும்பும் பேசாதே!" நான் கூறினேன், இராகவன், அதைக் காதில் போட்டுக் கொள்ளாமலே, "உனது அழகைக் கண்டிருப்பான் அவன். ஆனால் அதற்கேற்ற அந்தஸ்தை உனக்கேற்படுத்த அவன் முன்வருவானா என்பது சந்தேகம் தான். அவன் ஒரு முட்டாள்!" என்று கூறினான். இராகவனின் அந்தப் பேச்சு, கேலி செய்வதுபோல தோன்றவில்லை. ஆழ்ந்த கருத்துடன் அவன் அதனைக் கூறினதாகவே தென்பட்டது. அதைக் கூறும் போது, இராகவனின் முகம் வாடியது. என் மனம் ஒரு குலுக்கு குலுக்கிற்று.

திகிலோடு கலந்த காதல் என்னை மேலும் அதிகமாக வதைக்கத் தொடங்கிற்று. எங்கள் குடும்பக் கஷ்டமோ அதிகரித்துக் கொண்டே வந்தது. வீட்டின் மேல் வாங்கியிருந்த கடனுக்கு வட்டி கட்டத் தவறி விட்டார் அப்பா. அவர் என்ன செய்வார்? இல்லாத குறைதான். வட்டியைச் செலுத்தும்படி நிர்பந்தம் உண்டாகவே, 'அண்டிமாண்டு, எழுதிக் கொடுத்து வேறொரிடத்தில் கடன் வாங்கி, வட்டியைக் கட்டினார். இந்தக் கஷ்டத்திலே, ஒரு இளைப்பு இளைத்தே போனார். எவ்வளவு அலைச்சல், எவ்வளவு உழைப்பு என்ன செய்வார். மிராசுதாரரிடம்