உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:குமாஸ்தாவின் பெண், அண்ணாதுரை.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

48

அறிஞர் அண்ணா



சாந்தாவின் குரல் குயில் போன்றது. வெகு விரைவிலே நல்ல பாடகியானாள். என் செல்வாக்கை உபயோகித்தேன். ரேடியோவிலே சாந்தாவுக்கு மாதத்திலே நான்கு முறை "சான்ஸ்" கிடைக்க ஆரம்பித்தது. குடும்பக் கஷ்டத்தைத் தீர்க்க சாந்தாவின் சங்கீதம் உதவிற்று. ஆனால் அந்த சங்கீதத்தை பயன்படும்படி செய்தவள் யார்? அம்மாவுக்கு அது தெரியாது. சாந்தாவுக்கு ஜாடைமாடையாகத் தெரியும்.

மண்டையை உருக்கும் வெயிலில் இருந்து விட்டு குளிர்ந்த சோலைக்குள் போய் உட்கார்ந்தால் எப்படி இருக்கும்? வாழ்க்கை எனக்கு அத்தகையதாயிற்று. உலகம் ஒரு நாள், ஒரு வாரம், ஒரு மாதம் ஏதோ உளறிற்று, அதுவும் என் எதிரில் அல்ல. பிறகு என்னைப் பற்றிப் பேசுவதையும் விட்டு விட்டது. நான் குடி புகுந்த குதூகலம் நிறைந்த புது உலகமோ என்னைக் கைலாகு கொடுத்து வரவேற்று அந்த உலகின் அழகைக் காணச் சொல்லிற்று. இவ்வுளவு இன்பம் இருக்க இவைகளை விட்டு வீண் காலந்தள்ளினேன். மிராசுதார் வாங்கின மோரிஸ் மைனர் காரில் டிரைவர் துரைசாமி 40 மைல் வேகத்தில் ஓட்ட மிராசுதார் என் தோள் மீது கையைப் போட்டபடி இன்று தாராசசாங்கம் நாடகம் போகலாமா என்று கேட்கும்போது தான் ஆகட்டும், நாடகத்திலே உட்காரும்போது என் வைரத்தோடும் தொங்கட்டமும் ஒளிவிட சிவந்த என் அதரத்தைப் பிளந்து கொண்டு நகைப்பு ஒளி தரவும், அதைக் கண்டு "குஷி ஆட்கள்" கண்ணை என் பக்கம் திருப்பிப் பூசை செய்யும்போதுதானாகட்டும். டே! ராமா, டீ, போட எவ்வளவு நேரம் என்று நான் அதட்ட 'வந்தேனம்மா' என்று பணிந்து கூறிக்கொண்டு சமையல்காரன் வரும் போது தான் ஆகட்டும், இந்தப் புது மோஸ்தர் நிலக்கண்ணாடி பீரோ இந்த ஹாலிலே ரம்மியமாக இருக்கிறது என்று நண்பர்கள் புகழக்கேட்கும்போது தானாகட்டும், சுராஜ்மல் கம்பெனியார், புது மோஸ்தர் நகைகளை அனுப்பி வைக்கும் போது தானாகட்டும், நான் ஆனந்தம் அடையாமல் இருக்க முடியுமா? இவ்வளவுதானா! என் புன்சிரிப்புக்கு மிராசுதார் ஏங்கிக் கிடப்பார். எனக்குத் தலைவலி என்றால் அவருக்கு மன வலி. டாக்டர்கள் இரண்டு மூன்று பேர் வந்து