உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:குமாஸ்தாவின் பெண், அண்ணாதுரை.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

64

அறிஞர் அண்ணா



சோமு, என் ஆசை நாயகனாக இருக்க வேண்டி சூதும், வஞ்சனையும் பொய்யும் நிறைந்த நடத்தைகளை செய்து வந்து, அதிக பழக்கமாகி விட்டது. யாரோ லிலி என்ற ஆங்கிலோ இந்திய லேடியாம், வயது அவனைவிட அதிகமாகவே இருக்கும். அவளைப் பிடித்துக் கொண்டு ஆடத் தொடங்கினான். என் காதுக்கு இது முதன் முதல் எட்டியபோது நான் கண்டித்தேன். இனி என் வீட்டு வாயிற்படி ஏறக்கூடாது என்றேன். 'இல்லை கண்ணே! வியாபார சம்பந்தமாக அவளிடம் பழகினேன். உன்னை நான் விடுவேனோ மறப்பேனோ' என கெஞ்சினான். ஆனால் காரியம் மிஞ்சிக் கொண்டே வந்தது. சோமுவின் நடத்தையை மிராகதாரரே எனக்கு எடுத்துக் கூறி, எச்சரித்து வந்தார். சோமுவின் கெட்ட குணம் தெரிந்தால் நான் அவனை விட்டு விடுவேன், தனக்கு முழுச் சொந்தம் ஏற்படும் என்று மிராசுதாரர் எண்ணினார்.

"காந்தா! கை சலிக்காதுதானே உனக்கு நான் பணம் கொடுத்தேன். கடைசியில் துரோகம்தானே செய்தாய்"

"துரோகமென்ன செய்தேன். நமது குடும்பச் செலவுக்கு ஏற்றபடி உம்மால் பணம் தர முடியவில்லை. ஏதோ பாலிய சினேகமாயிற்றே என்று சோமுவைக் கேட்டேன். அதனால்தானே காலந்தள்ள முடிகிறது. உமது வருவாய் குறைந்து விட்டது என்பதற்காக எந்தச் செலவைக் குறைத்துக் கொள்ள முடிகிறது?"

"முடியுமா? முடியாதததான். பிறந்தது முதல் பணத்திலேயே புரண்டவள்."

"போதும் நிறுத்துங்கள். பிறக்கும்போது யாரும் தங்கக் கவசத்தோடு பிறப்பதில்லை, கஷ்டப்பட்டுக்கொண்டு தான் இருந்தேன், உம்மை யார் என்னை இழுத்து இப்படி செலவிட்டு வாழும் வாழ்க்கையில் கொண்டு வரச் சொன்னது?"

"சரியான கேள்வி."

"நன்றாக வாழ்ந்து கொண்டிருந்தவள்" திடீரென்று எப்படி வாழ்க்கையை மாற்றிக் கொள்வது? நாலு பேர் கை தட்டிக் கேலி செய்யமாட்டார்களா? உங்களுக்குத் தானே அது கேவலம். மிராசுதார் பாடு தீர்ந்து விட்டது. காந்தா பாடு