உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:குமாஸ்தாவின் பெண், அண்ணாதுரை.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

70

அறிஞர் அண்ணா



தலையில் அணிந்து கொண்டு சோமுவிடம் வந்து கொஞ்சலானேன். ஜடையில் ரோஜா இருப்பதைத் தெரிந்து கொண்ட சோமு மிக்க மகிழ்ச்சி அடைந்தான்.

"சோமு! உன்னை ஒரு கேள்வி கேட்கப் போகிறேன்" என்று நான் பேச்சை துவக்கினேன்.

"ஓராயிரம் கேள் ஒய்யாரி" என்றான் சோமு.

"எனக்கு நீ ஜவ்வாது வாங்கிக்கொண்டு வந்தாயே, அது ஜவ்வாதுதானா?" என்று கேட்டேன்.

"ஆமாம், ஏன்? என்ன விசித்திரமான கேள்வி" என்று சோமு கேட்டுவிட்டுச் சிரித்தான். ஆனால் அவன் முகத்தில் சிறிது பயமும் தட்டிற்று.

"அந்த ஜவ்வாது ஒரு பெண்ணின் உயிரைத்தான் போக்கிற்று" என்று நான் துணிந்து கூறினேன்.

"என்ன காந்தா? விடுகதை பேசுகிறாய்" என்று கேட்டான் சோமு. அவன் குரலில் நடுக்கம் உண்டாயிற்று.

"டாக்டரின் பரீட்சை நடந்தது" என்று நான் சொன்னேன்.

"பைத்தியமா, உனக்கு உளறுகிறாய்! ஜவ்வாதுக்கும் டாக்டருக்கும் என்ன சம்பந்தம்?" என்று கேலி போல் சோமு பேசினான். ஆனால் முகத்திலே வியர்வை முத்து முத்தாகத் தோன்றி விட்டது.

"ஜவ்வாதில் கலந்திருந்த விஷத்துக்கு என்ன பெயர்" என்று தைரியமாகவே நான் கேட்டேன்.

"இது என்ன கிரகசாரம் காந்தா? நீ கூறுவது எனக்கொன்றுமே புரியவில்லையே" என்றான் பாசாங்குக்காரன் பாதகன்.

"புரியாது, ஆனால் எனக்குப் புரிந்து விட்டது. என் உயிரின் விலை 20,000 ரூபாய் அல்லவா" என்றேன் நான்.

"நான் இனி அரைக்ஷணமும் இங்கு இருக்கமாட்டேன். உன் பணத்துக்காக உன்னைக் கொல்ல நான் உனக்கு ஜவ்வாதில் விஷமிட்டுக் கொடுத்தேனா? இது என்ன அபாண்டம்" என்று கூறிக்கொண்டே சோமு, "ஏதோ ஒரு காகிதம் கொடு. என் பெயருக்கு நீ எழுதி வைத்திருக்கும்