உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:குமாஸ்தாவின் பெண், அண்ணாதுரை.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

குமாஸ்தாவின் பெண்

71



இன்ஷ்யூர் தொகையை மாற்றிவிட்டு, நான் வெளியே போகிறேன். அரை விநாடிகூட இந்தப் பழிச்சொல்லைக் கேட்ட பிறகு, அந்தப் பணத்துக்கு நான் சொந்தக்காரனாக இருக்கமாட்டேன். யார் பேருக்கு மாற்றி எழுத வேண்டும் சொல்" என்று கோபத்துடன் கேட்பவன் போல் சோமு நடித்தான்.

"லிலி பேருக்கு எழுது" என்று நான் கூறினேன்.

"விளையாடாதே" என்றான் சோமு.

"ஏன் விளையாடக் கூடாது?" எனறு கேட்டுக் கொண்டே, நான் அவனைத் தழுவிக் கொண்டேன். அந்த நேரம் வரையில் அவனுடன் கோபித்துக் கொண்டு பேசிய நான். திடீரென்று அவனை அணைத்துக் கொள்ளவே, சோமு பயந்தான். "இதென்ன சோமு1 ஒரு பெண் தழுவிக் கொண்டால் பயப்படுவதா" என்று நான் கேலி செய்து சிரித்தேன், என் சிரிப்பிலே கோபமே தொனித்தது. அவனும் என் கூடவே சிரித்தான். ஆனால் முகம் பயக்குறிகளையே காட்டிற்று. என் கை பெருவிரவில், நான் ஒரு இரும்பு உறை போட்டுக் கொண்டிருந்தேன். அது, ஜவ்வாது டப்பியின் மேல் மூடிதான்.

அதைக் காட்டினேன் சோமுவிடம், "இது தான சோமு, அந்த ஜவ்வாது டப்பியின் மூடி இந்த டப்பியிலிருந்த ஜவ்வாதை பூசிக்கொண்டுதான் என் வீட்டு வேலைக்காரியின் பெண் இறந்து விட்டாள். ஜவ்வாதில் விஷங்கலப்பது சாமாத்தியமாகாது. அந்த டப்பியின மேல் மூடியிலே கலக்க வேண்டும்" என்று கூறிக்கொண்டே, ஆக்ரோஷத்துடன சோமுவை அணைத்துக் கொண்டு அவனது நெஞ்சுக குழியில் கைப் பெருவிரலில் போட்டிருந்த இரும்பு மூடியை வைத்து அழுத்தினேன. திடுக்கிட்ட சோமு திணறினான் என் பிடி தளரவில்லை. அவனது கண்கள் வெளியே வந்து விடும் போலிருந்தன. நான் பயப்படவில்லை. அவனைக் கொன்று விடுவதென முடிவு செய்த பிறகு பயம் ஏது? அப்போது அந்த வஞ்சகன் சரேலென்று என் ஜடையில் கை வைத்து ரோஜாவை எடுத்து அதனை என் நாசியில் வைத்து அழுத்தினான். இரும்பு தன்