பக்கம்:குமுத வாசகம்-முதல் படிவம்-பொதுப் பகுதி.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14

9. நிலத்தை உழுதால் மட்டும் போதாது; நீர்பாய்ச்சி

விதைத்தால் மட்டும் போதாது. அடிக்கடி அதனைப் போய்ப்

பார்த்துக் கவனித்துக்கொண்டே வரவேண்டும். இல்லை

யானுல் ஆடு மாடுகளால் பயிர் நாசமாகிவிடும். பறவைகள்

கொத்திவிடாதபடி கவனித்துக் கொள்ளவேண்டும். திருடர்

கள் திருடாமல் இருக்கக் கவனித்து வரவேண்டும். இப்படிச்

சேதம் நேராதபடி கவனிக்க வேணடும் என்பதற்காகவே " உடையவன் கண்ளுேடாப் பயிர் அழியும்" என்னும் முதுமொழியும் தோன்றியுள்ளது. பிறகு அறுவடை செய்து களத்தில் இட்டு நெல் வேறு, வைக்கோல் வேருகச் செய்து முட்டைகள்ாகக்கட்டி வண்டிகளில் ஏற்றிக்கொண்டு விட்டில் சேர்க்கவேண்டும். வைக்கோலை மாட்டுக்கு உணவாகும் பொருட்டுப் போராக அமைக்கவேண்டும். பகடு நடந்த உணவை நாமே உண்ணுமல் தென்புலத்தார், தெய்வம், விருந்து, அரசு, ஒக்கல் முதலியவர்க்கு ஈந்து ாேமம் உண்டு வாழவேண்டும்.