பக்கம்:குமுத வாசகம்-முதல் படிவம்-பொதுப் பகுதி.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30

அம்பு-இவற்றுள் ஒருமை எண்ணக் குறிக் .

பும், பன்மை எண்னக் குறிக்கும் சொற்களேயும் எடு

காட்டு. 2. இப்பாடத்தின் எட்டாம் பாராவில் உள்ள படர்க்கைப் பெயர்

களே எடுத்து எழுது. ، تم ' நீங்கள், யாங்கள், நாம், ர்ே, துமது-இவை இன்ன இடத் துக்குரிய சொற்களெனக் கூறு.

of;

3

5. காகிதம் செய்யும் முறை

1. அருமை மாணவர்களே! நீங்கள் இப்பொழுது படிப்பதற்கும், எழுதுவதற்கும் பயன்படுத்தும் காகிதம் எப் படிச் செய்யப்படுகிறது என்பது உங்களுக்குத் தெரியுமா ? தெரியாவிட்டால் நான் சொல்லுகிறேன் கேளுங்கள்.

2. முதல் முதல் எழுதுவதற்குக் காகிதம் பயன்பட வில்லை. ஏனெனில், பழங்காலத்தில் காகிதம் என்னும் பொருளே கிடையாது. எழுதவேண்டியவற்றைச் செங்கல் மீதும், பதம் செய்த தோல்களின் மேலும், செம்புத் தகடு களின்மீதும், இலைகளின்மீதும் எழுதி வந்தனர். செப்பு ஏடு களில் எழுதி வந்ததால்தான் செப்புப் பட்டயங்கள் என்றும், கல்லில் எழுதிவந்ததால்தான் கல் வெட்டுகள் சிலையில் எழுத்து என்பனபோன்ற தொடர்களும் வழங்கலாயின. இவைகளே அன்றிப் பனையோலைகளும் எழுதுவதற்குப் பயன் பட்டன. அவை சுவடிகள் எனப் பெயர் பெற்றன. இப்படி இப்பொருள்களின்மீது எழுதுவது சிரமமாக இருந் தது. ஆகவே, இச்சிரமம் தீர ஒரு வழி பின்னல் கண்டு பிடிக்கப்பட்டது.

3. காகிதம் செய்யும் தொழிலில் முதலில் இறங்கிய வர்கள் எகிப்து தேசத்தவர்களும், சீன தேசத்தவர்களும்