பக்கம்:குமுத வாசகம்-மூன்றாம் படிவம்-பொதுப் பகுதி.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24

அணுகி, 'ஆருயிர் நண்ப, நான் மணமாகா இளைஞன் என்பது அறியாததன்று. நான் இப்பொழுது திருமணத்திற்கு வேண்டிய ஆயத்தம் செய்கிறேன். பெல்மாண்டு நகரில் ரு மாது இருக்கிருள். அவள் அழகில் மிகுந்தவள் செல் ல் சிறந்தவள். அவளே நான் மணக்க முயல்கிறேன். பெல்மாண்டுக்குப் போகவும் எனக்குரிய ஆடை அலங்காரங் கிளேச் செய்துகொள்ளவும் எனக்குப் பணம் தேவையாய் இருக்கிறது. ஆகவே, எனக்கு இப்போது பண உதவி புரி வாயாக’ என்று வேண்டிக்கொண்டனன்.

4. அந்தோனியோவினிடம் அச்சமயத்தில் பணம் இல்லை. எல்லாம் சரக்குகளாக மாற்றப்பட்டுக் கப்பல்களில் ஏற்றப்பட்டு வெளி காடுகளுக்குச் சென்றிருந்தன. அவிை விற்கப்பட்டு வந்த பிறகே அவன் கையில் பணம் ஏராளமாக இருக்கும். என்ருலும், அந்தோனியோ எவ்வாறேனும் பசானி யோவின் எண்ணத்தை நிறைவேற்ற வேண்டுமென்ற தீர் மானம் கொண்டவனுய், நண்ப, உனக்கு உதவக்கூடிய பொருள் என்னிடம் இல்லை என்பதைப்பற்றி நீ கவலைப்பட வேண்டா. ஷைலக்கினிடம் வட்டிக்குப் பணம் பெற்றுக் கொள். அப்பணத்திற்கு நானே ஈடாய் இருந்து பத்திரத்தில் கையொப்பம் இடுவதாகவும் சொல். அவன் தடையின்றிக் கொடுப்பான். அதனைப் பெற்று உன் எண்ணத்தை நிறை வேற்றிக்கொள்," என்றனன். பிறகு இருவரும் ஷைலக்கை நாடிச் சென்றனர்.

5. பசானியோ மட்டும் இைலக்கை அண்டினன. அந்தோனியோ சிறிது சேய்மைக்கண் நின்றுவிட்டனன்.