பக்கம்:குமுத வாசகம்-மூன்றாம் படிவம்-பொதுப் பகுதி.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28

12. போர்ஷியா தன் பணி மகளாக கெரிஸாவையும் அழைத்துக்கொண்டு, தான் வழக்கறிஞர் போலவும், தன் பணிமகள் தன் குமாஸ்தாவைப் போலவும் வேடம் பூண்டு வெனிஸ் ககர நீதி மன்றத்தை அடைந்தனள்,

13. நீதி மன்றத்தில் அந்தோனியோ, பசானியோ, ஷைலக்கு, வெனிஸ் நகரத் தலைவர் முதலிய பலர் நிறைந்திருந் தனர். பசானியோ ஷைலக்கினிடம் அவன் கொடுத்த பணத்தைவிட மும்மடங்கு கொடுக்க முன் வந்தான். ஷைலக்கு வாங்க மறுத்துவிட்டான்.

14. மாறு வேடம் பூண்டு வழக்கறிஞராய்க் காட்சி யளித்த போர்வியா, விசாரணை நடத்தத் தொடங்கிள்ை. போர்ஷியா வழக்கின கன்கு விசாரித்துக்கொண்டு, அந்தோ வியோ பணம் செலுத்த இயலாது இருக்கின்ருரோ?" என்று வினவினுள். உடனே பசானியோ, 'இதோ! பணம் ஆயத்த மாய் இருக்கிறது. வாங்கிய பணத்தைப் போல மும்மடங்கு கொடுக்கவும் சித்தமாய் இருக்கிறேன் என்று கூறினன். உடனே போர்வியாஷைலக்கை நோக்கி, 'ஐயா, பணத்தைப் பெற்றுக்கொள்வதுதானே? இதில் என்ன் தடை? என்று கேட்டனள். ஷைலக்கு, தனக்குப் பணம் வேண்டா என் றும், பத்திரத்தில் எழுதியுள்ளபடி ஒரு பவுண்டு தசையே வேண்டுமென்றும் வற்புறுத்திக் கூறினன்.

15. பேர்ஷியா ஷைலக்கைப் பார்த்து, 'ஐயா, சிறிது இரக்கம் காட்டவேண்டும். இவ்வளவு கொடுமையாய் இருத் தல் கூடாது. பத்திரத்தில் உள்ளபடி இருதயத்திலிருந்து ஒரு பவுண்டு தசை கேட்பது முறைதான். இருந்தாலும், உயிருக்கு ஆபத்தான செயலில் அல்லவா நீர் ஈடுபடுகிறீர்? ஆகவே, சிறிது மனம் இளக வேண்டும் என்று வேண்டி ள்ை. எவ்வளவு சொல்லியும் வுைலக்கு கேட்கவில்லை;