பக்கம்:குமுத வாசகம்-மூன்றாம் படிவம்-பொதுப் பகுதி.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42

6. பாவலரும் நாவலரும்

1. கம் தாய் மொழியாகிய தமிழ் மொழியே பல மொழி களுக்குள்ளே மிகவும் சிறந்த மொழியாகச் சான்ருேர் பலரால் கருதப்பட்டு வருகின்றது. தமிழ் நாட்டில் பல நூற்றண்டு களுக்கு முன்னரே மண்டலாதிபதிகள் பலர் தமிழ் மொழி யின் இன்பரசத்தைப் பருகவேண்டி, ஆங்காங்கே சங்கங் களேத் தோற்றுவித்து, இலக்கிய இலக்கணங்களில் வல்லு நராயிருந்த புலவர் அனைவரையும் ஒன்று சேர்த்துத் தமிழை ஆராய்ந்து இன்புற்ருர்கள். அச் சங்கங்களே தலைச் சங்கம், இடைச்சங்கம், கடைச்சங்கம் என்னும் முச்சங்கங்களாகும். பல கவிஞர்கள் தமிழ் மொழியை இறைவனுடன் ஒப்பிட்டுப் பல பாக்களப்பாடி யிருக்கின்றனராதலால், தமிழின் தனிச் சிறப்பு குன்றின்மேலிட்ட விளக்கெனத் தெற்றென் விளங்கா கிற்கின்றது. பல நாட்டுப் பேரறிஞர்களும் தமிழ் மொழியின் மீது அன்புகொண்டு, இலக்கிய இலக்கணங்களையும் இதிகா சங்களேயும் ஐயம் நீங்கக் கற்று, பேரின்பமாகிய தமிழின்பத் தைத் துய்த்தார்கள். அத்தகையவர்களுக்குச் சான்ருக ஜி. யூ. போப்பையர், வீரமாமுனிவர், கால்டுவெல் முதலிய அறிஞர்களேக் காட்டலாம்.

2. தமிழ் என்னும் பதத்திற்கு அழகு இனிமை என் பன பொருளாகும். தமிழ் தழீஇய சாயலவர் , வண்டு தமிழ்ப் பாட்டிகைக்கும் தாமரையே என்னும் தொடர்களில் முறையே இப்பொருள்கள் மிளிர்தலைக் காண்க. தமிழ் மொழி யைப் பேணி, தமிழைத் தெய்வமாகப் போற்றி, பல இன் சுவைப் பாக்களைப் பாடி மகிழ்ச்சியுற்ற சமீப காலப் புலவர் கள் பலர். அத்தகைய பாவலர்களில் திரிசிரபுரம் மகா வித்து வான் மீட்ைசிசுந்தரம் பிள்ளை அவர்களும் ஒருவர். அவர் கவிப் புலமையில் தனிப்பெரு வல்லுநராய் விளங்கினர்.