பக்கம்:குமுத வாசகம்-மூன்றாம் படிவம்-பொதுப் பகுதி.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

母婴

புலவர்களும் திருவாவடுதுறை ஆதீன மடத்தின் மகா சக்கி தானமும் மற்றுமுள்ளோரும் பிள்ளையவர்கள் என்றே வழங்கி வந்தார்கள்.

توسعه

3. பிள்ளை அவர்கள் புராணங்கள், அந்தாதிகள், கலம் பகங்கள், பிள்ளைத்தமிழ், மாலைகள் முதலியவைகளைப் பிறர் வியக்கத் தகுந்த முறையில் பாடியுள்ளார்கள். அவை யாவும் சொல் நயம், பொருள் இன்பம் முதலியன சிறக்க அமையப் பெற்றிருக்கின்றன. அவர் சைவராதலால், அவரது நெற்றி யில் திருநீற்றுப் பொலிவும் மார்பிலே அக்க மணி மாலையும் எப்பொழுதும் விளங்கின. அமைதியான நடக்கைக்கும், பண்பட்ட வாழ்க்கைக்கும், குன்ரு ஊக்கத்திற்கும் எடுத்துக் காட்டாய் விளங்கியவர் நம் பிள்ளை அவர்களே. அவருடைய மாளுக்கர் பலர் தமிழ் நாடெங்கும் பரவியிருந்தனர். அவர் களில் முக்கியமானவர்களாகக் குறிப்பிடத் தக்கவர்கள் திரு. தியாகராய செட்டியார் அவர்களும், மகாமகோபாத் தியாய தாட்சிளுத்திய கலாநிதி டாக்டர் உ. வே. சாமி காதையரவர்களும் ஆவார்கள்.

4. மகாவித்துவான் பிள்ளையவர்கள் செல்லும் இடங் களுக்கெல்லாம் தம் மாளுக்கர்களுடன் ஏறுபோல் பீடுநடை யுடன் நடந்து சொல்லுவது வழக்கம். ஒரு சமயம் தமிழ் வளர்ந்த நான்மாடக் கூடலாகிய மதுரையம்பதியையும் அங்கு விற்றிருக்கின்ற சோமசுந்தரக் கடவுளேயும் கண்டு வணங்கத் தம்மாளுக்கர்களுடன் அந்நகரத்திற்குச்சென்ருர், அவரையும், அவர் மாளுக்கர் குழுவினையும் கண்ட மதுரை மக்களும், புலவர்களும் இரவியைக்கண்ட தாமரை போல அகமும் முக மும் மலர்ந்து, மகிழ்ச்சியுடன் வரவேற்று, அவரை நன்கு உபசரித்தார்கள். மதுரை மாநகரில் திருவாவடுதுறை ஆதீன மகாவித்துவான் மீனுட்சி சுந்தரம் பிள்ளையவர்கள் வந்திருப்