பக்கம்:குமுத வாசகம்-மூன்றாம் படிவம்-பொதுப் பகுதி.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

60

சேகரப் பெருமாள் மட்டும் இவ்வாறு அறுப்பு முறையில் நோய் போக்கியதைக் குறிப்பிட்டார் அல்லர். குமரகுருபர சுவாமிகளும் நீதிநெறி விளக்கத்தில் கண்ணுேட்டம் செய் யார் கருவியிட்டாற்றுவார் புண்வைத்து முடார் பொதிந்து, என்று அறிவித்திருத்தலினின்றும் இதன் உண்மையை நன்கு அறியலாம். இத்தகைய சான்றுகளால் அறுப்பு முறைச் சிகிச்சை நம்மவர்க்குப் புது முறையன்று; பழமுறையே என்பது தெரியவருகிறது. - x

3. ஆனல், மேனுட்டவர் அறுப்பு முறை சிகிச்சைக் கும்.கீழ்நாட்டவர் சத்திரவித்தை முறைக்கும் பெரிதும் வேறு பிாடு உண்டு. மேனுட்டவர் அறுக்கும் போது நோய் தெரி யாதிருக்க ஒரு வழியைக் கண்டு பிடித்திருக்கின்ற மவர் அவ்வாறு இன்றி அறுக்கும் முறையைப்பற்றி அறிந்திருந்தனர். அப்படி அறுப்பதானுல் பிணியாளர் படும் துயரம் பகர ஒன்ணுதது. இந்தத் துன்பம் மேனுட்டு முறை யிலும் பல காலம் இருந்தது. ஆல்ை, விஞ்ஞான அறிவு ஓங்கி வளர வளர, அறுக்கப்படும் பிணியாளர் நோயுருதிருத் தற்குரிய வழி வகைகள் ஏற்படலாயின. - - ------ - - - -

4. நோயாளிகளின் உடற்பகுதியில் ஏதேனும் கோளாறு ஏற்பட்டால், அதனை உள் மருந்தினலோ, அன்றி வெளிப்பூசு மருந்தினலோ தீர்க்க இயலாத காலங்களில், கத்திகொண்டு அறுத்தே அக்கோளாற்றைத் தீர்க்க வேண்டி இருக்கையில், அப்பிணியாளர் உறும் இன்னலைக் கண்ணுரக் கண்டார் ஒர் இளைஞர். அவர் அந்நோயாளர் படும் அவத் தையைக் கண்டு ஆற்ற ஒண்ணுத் துயரமும் கொண்டார்: அறுக்கையில் யாதொரு நோயும் உணராதிருக்க, வழி தேட வேண்டும் என்று எண்ணினர் : எண்ணியதைச் செயல் முறையில் கொணரவும் தீர்மானித்தார். அப்படிச் செய்ய