பக்கம்:குயிலும் சஞ்சீவி பர்வதத்தின் சாரலும்.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

v

மூலம் புதுமதிப்பைப் பெற்று அறிமுகமான பாவேந்தர், பாரதிதாசன் கவிதைகள் மூலம் நெஞ்சரங்கில் இடம் பிடித்துக் கொண்டார்.

பாரதியார் தொட்டுக் காட்டிய பலதுறைகளை விரித்து விளக்கிப் பேசும் விரிவுரையாளராக விளங்கினார் பாவேந்தர்.

குயில் பாட்டில் நெஞ்சைப் பறிகொடுத்திருந்த எனக்கு பாவேந்தரின் சஞ்சீவி பர்வதத்தின் சாரல் பாட்டு கவர்ச்சி ஏற்படுத்தியது.

அச்சடையாளம் குயில்பாட்டுப் போலவே அமைந்திருந்த இந்த நெடும்பாட்டு முதலில் ஏதோ குயில்பாட்டை அப்படியே (காப்பியடித்து) நகலெடுத்தது போன்ற எண்ணத்தையே தோற்றுவித்தது. ஆனால் தொடர்ந்து வரிவரியாய் அடியடியாய்ப் படிக்கத் தொடங்கியபோதுதான், புதுச் சுவையும் புதுப்போக்கும், புதுக்கருத்தும் இதில் பலப்பலவாய் விரிந்து கிடப்பதையுணர முடிந்தது.

இக்காலத்தில் புதுக் கவிதை எழுதப்புகும் இளைஞர்கள் எதையும் ஆழ்ந்து படிக்காமல், சும்மா புரட்டிப்பார்த்து விட்டு, பாரதி, பாரதிதாசன், பாரதிதாசன் பரம்பரை யெல்லாம் ஒரே விருத்தம்! ஒரே ஸ்டிரியோ டைப்! என்று ஒதுக்கித் தள்ளிவிட்டு, ‘மரபுக் கவிதை செத்துப் போய் விட்டது’ என்று புதிய கண்டு பிடிப்புச் செய்து வெளிப்படுத்துவதுபோல் பேசிக் கொண்டு, பயனுள்ள பல இலக்கியங்களைத் தொட்டுப் பாராமலே, உணர்வுப் பூர்வமான ஓர் இலக்கியத்தைப் படைப்பதாக நடித்துக் கொண்டு, குப்பைகளையும், கூளங்களையும், சதைப் பிண்டங்களையும், குறைப் பிரசவப்படுத்திக் கொண்டிருப்பதை நினைத்தால் பரிதாபமாய் இருக்கிறது. உள்ள குப்பைகளையே அள்ள முடியாமல் திணறிக் கொண்டிருக்கும் ஊழல் மாநகராட்சிகள் இந்தப்