பக்கம்:குயில்களும் இளவேனில்களும்.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஃப்ரான்சுவா வில்லன்

பிரெஞ்சு நாட்டு வீராங்கனை ஜோன்-ஆப் ஆர்க் தீயிலிட்டுத் தெருவில் எரிக்கப்பட்ட 1431 ஆம் ஆண்டு, பாரிஸ் நகரில் பிறந் தான் கவிஞன் வில்லன். பெற்றோர் இவனுக்கு வைத்த பெயர் ஃப்ரான்சுவாடி-மாண்ட் கார்பியர். வில்லன் என்பது இவனை இளமையில் பாதுகாத்து வளர்த்த கில்லாம்-டி-வில்லன் என்ற பாதிரியாரிட மிருந்து பெற்ற பெயர்.

இந்திய இலக்கிய வரலாற்றில் கள்வகை வாழ்க்கையைத் தொடங்கிக் கவிஞளுக மாறியவர் மகாகவி வால்மீகி. பிரெஞ்சு இலக்கிய வரலாற்றில் கள்வனாகவும், கவிஞ னாகவும் கடைசிவரை வாழ்ந்து தன் மூச்சை முடித்துக் கொண்டவன் வில்லன்.

வில்லன் குழந்தையாக இருக்கும்போதே தந்தையை இழந்தான்; ஆங்கிலேயரோடு J5T isosroorGui Gumti (Hundred years war) நடத்தி பிரெஞ்சு நாடு வறுமையின் எல்லைக் கோட்டைத் தொட்டுக் கொண். டிருந்த நேரம், வில்லனின் தளர்நடைப் பருவம், நாடெங்கும் திரிந்து கொண் டிருந்த கூலியில்லாப் பட்டாளம், எதிர்ப் பட்டதையெல்லாம் அடித்து நொறுக்கிக் கபளிகரம் செய்து கொண்டிருந்தது.

1 0 1