பக்கம்:குயில்களும் இளவேனில்களும்.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மிக்க ஆர்வத்தோடு காதலித்த லில்லி, தான் வேறொரு சீமானைத் திருமணம் செய்து கொள்ளப் போவதாகக் கூறியதும் இவன் அதிர்ந்துபோனான். ஏமாற்றம் இவன் குரல்வளையை நெரித்து மூச்சுத் திணரும்படி செய்தது. அப்போது அவன் உள்ளத்தில் பீறிட்டெழுந்த கவிதை, குருதியில் குளித்து வந்தது என்று கூறலாம்.

நீ எங்கு

ஒடி ஒளிந்தாலும் முடமான என் காதற் சுமை உன்னைக் கட்டாயம் அழுத்திக் கொண்டிருக்கும். ஏமாற்றத்தின் கொடுமையை நான் கடைசி முறையாக அழுது தீர்க்கிறேன்,

உழைத்துச் சலித்த எருது தண்ணிரில் படிந்து தன் தளர்ச்சியை நீக்கிக் கொள்ளும். எனக்கோ - உன் காதல் கடலைத் தவிர மூழ்குவதற்கு வேறு இடமில்லை. ஆனால் - வழியும் கண்ணிர் என் பாதையை மறைக்கிறது.

களைத்த களிறு களைப்புத்தீர விரும்பினால் சூரியச் சூடேறிய மணலில் சுகங்காணப் புரளும்.

I 1 7