பக்கம்:குயில்களும் இளவேனில்களும்.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சாமியாடியும் கவிஞனும் ஒப்பர். சாமியாடிக்கு ஆவேசம் வரும்போது, அவன் வாயில் அருள் வாக்குப் பிறப்பது போல், கவிஞனுக்குக் கவிதை ஆவேசம் வரும்போது அவன் வாயில் அற்புதங்கள் பிறக்கின்றன என்று கிரேக்கத் தத்துவமேதை சாக்ரட்டீஸ் குறிப்பிடுகிறான்.

மேலே குறிப்பிட்ட அறிஞர்களின் கூற்றிலிருந்து ஒரு செய்தி தெளிவாகப் புலனாகிறது, கவிஞன் மற்ற மாந்தரினின்றும் மாறுபட்டவன் என்று. அவன் சாதாரண மனிதர்களின் அளவுகோலுக்கு எட்டாதவன் ; அவ ன் பேச்சையும் செயலையும் வழக்கமான துலாக்கோலில் எடைபோட முடியாது. கவிஞனின் பயித்தியக்காரத்தனம், சில நேரங் களில் மேதைகளுக்கும் கலங்கரை விளக்கம் ஆவதுண்டு.

கவிஞர்களைப் பொதுவாக இரண்டு வகையாகப் பிரிக்க லாம். கவிதைக்காகவே கவிதை எழுதும் கவிஞர்கள் : சமுதாயத்துக்காகக் கவிதை எழுதும் கவிஞர்கள். முதல் வகைக் கவிஞர்களின் கவிதைப் பயன், படைப்பின்பம் மட்டுமே; இரண்டாவது வகைக் கவிஞர்களின் கவிதைப் பயன் புரட்சி; இவர்கள் புரட்சிக் கவிஞர்கள். கலை, இலக்கியம், சமுதாயம், அரசியல் ஆகிய எத்துறையிலும் இவர்கள் காலத்துக்கேற்ற மாறுதலையும் மறுமலர்ச்சியை யும் விரும்பி உழைப்பர். இவர்கள் புரட்சி இயக்கங்களின் விடிவெள்ளியாக, சி ல சமயங்களில் ஈட்டிமுனையாகச் செயல்படுவர். அந்த முயற்சியில் தமது இன்னுயிரையும் வழங்குவர்.

தன்மானத்தை விட்டுக்கொடுக்காத சீனக்கவிஞர் பாய் ஜூயி (Bai Juyi) புதுக்கிணறு என்ற கவிதை எழுதியதற் காக ஏழாம் நூற்றாண்டிலேயே நாடுகடத்தப்பட்டார்.

ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த லார்காவும், சிலி நாட்டைச் சேர்ந்த பாப்லா நெருடாவும் அரசியற்காரணங்களுக்காக

1 ()