பக்கம்:குயில்களும் இளவேனில்களும்.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இடுகாட்டில் எ ல் லா ரு ம் வழக்கமாகப் பேசும் பேச்சு என்னவென்று நமக்குத்தெரியும். இர ண் டு கவிஞர்கள் சேர்ந்தால் இடுகாடும் சொர்க்கம் ஆகிவிடுகிறது. பாரதி தாசன் படுக்க இடம் தேடுகிறார்.

சிதைந்த மல்லிகைச் செடி ; அதில் ஒரே ஒரு மிலாரில் தான் உயிர் இருந்தது. அந்த உயி ரு ள்ள மிலாரும் தரையைத் தழுவியிருந்தது. இ ைல க ள் ஒளிப்பச்சை : இடைக்கிடையே நேற்றுமலர்ந்த பூக்கள் ; மலர வேண்டிய காய் அரும்புகள் ; மல்லிகைச் செடியின் அண்டையில், மேல்துண்டை விரித்துப்போட்டுப் படுத்துக்கொண்டேன். காலை எட்டரை மணி : இளவெயிலின் மெல்லிய தங்கக் கதிர்கள் சிறுகாற்றில் ஆடு ம் பச்சிலைமேல் மி ன் னி க் .ெ கா ன் டி ரு ந் த ன. சிற்றரும்பும் பூவும் சிரித்துக் கொண்டிருந்தன. இடுகாட்டில் - பாவேந்தர் இப்படிக் கூறுகிறார்.

சிறிது நேர த் தி ல் யாரோ ஒருவன், அருகில் இருந்த மல்லிகைச் செடியின் பூக்களையும் அரும்புகளையும் பாப்பம்மாள் கோவில் சாமிக்குப் போடப் பறித்துப் போகிறான். அதைப்பார்த்த பாரதியின் உள்ளம் துணுக் குறுகிறது. பாரதியார் பாரதிதாசனிடம் கூறுகிறார்.

" உன் மல்லிகைச் செடியில் இருந்து பூக்களையும் அரும்பு களையும், பறித்துக்கொண்டு போய்விட்டான், அதோ அந்தக்கல்லின் மீது போட. நீ மல்லிகையின் மணத்தையும், அழகையும் சுவைத்திருந்தாய் : நா ன் பார்த்தேன். அப்போது என் நெஞ்சு பெற்ற இன்பத்தின் அளவை நீ கணக்கெடுக்கவில்லை ; னடை தெரியவில்லை உனக்கு ; ரசத்திலே தேர்ச்சிகொள் ' என்றார் பாரதி. பாரதியின் பு தி ய ஆத்திச்சூடி தொடர்கிறது. இடுகாட்டைக் கற்பனை மழையால் நனைத்துக்கொண்டிருக்கும் இவர்கள்

14