பக்கம்:குயில்களும் இளவேனில்களும்.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

யார் ? க வி ைத க் காதலர்கள். மல்லிகைச் செடியின் ஒரத்தில் நடக்கும் இந்த இலக்கியத் தேனிலவைப்போல்,

எத்தனையோ காட்சிகளை இந்நூலில் கண் டு சுவைக் கலாம்.

ஃபிர்தெளஸி பாரசீக நாட்டுக் கம்பன். அவன் பாரசீக மன்னர் வரலாற்றை ஷாநாமா என்ற பெயரில் பெருங் காப்பியமாக எழுதி முடித்தான். அந்த நாட்டு மன்னன் கஜினி முகம்மது போர்க்களத்தில் இருந்தான். எதிரியோடு கடும்போர் நடந்து கொண்டிருந்தது. கஜினியின் படை பின்வாங்கிக் கொண்டிருந்த நேரம். இவன் படை வீரர் சிலர் ஒரு வீரப்பாடலை உண ர் ச் சி பொங்கப் பாடிக் கொண் டு வந்து முன்னேறித் தாக்கினர், கஜினிக்கு வெற்றி : கஜினி முகம்மது இப்பாடல் யார் பாடியது ? என்று கேட்டான். இது ஃபிர்தெளஸி எழுதிய ஷாநாமா வரிகள் என்று கூறினார்கள், அந்த வீரர்கள். தலைநகர் திரும்பியதும் ஷாநாமாவின் ஒவ்வொரு பாடலுக்கும் ஒரு பொ ற் கா சு வீதம் ஒரு தட்டில் கொட்டி நிரப்பி, ஃபிர்தெளஸியின் வீட்டிற்கு அனுப்பினான் கஜினிமுகம்மது. அத்தட்டு ஃபிர்தெளஸியின் வீட்டை நெருங்கியபோது, வறுமையில் வாடிச்செத்த ஃபிர்தெளஸியின் பிணம் எதிரே வந்தது. இது பாரசீகக் கம்பனின் சோக வரலாறு.

ஃபிர்தெளஸியின் வீர நடைப்பாட்டுக்கு இருந்த அதே ஆற்றல் பாவேந்தரின் இந்தி எதிர்ப்புப் பாட்டுக்கும் உண்டு. அந்த எழுச்சிப் பாட்டு 1988-ஆம் ஆண்டில் நடைபெற்ற இந்தி எதிர்ப்புப் போரின் சங்கநாதமாக விளங்கியது. தமிழ்நாட்டின் மூலை முடுக்கெல்லாம் அ ப் பா ட ல் எதிரொலித்தது. அந்தப் பாடலைப் பாடிய வண்ணம் தமிழ்த் தொண்டர்படை சிறைச்சாலையை நோக்கி அணிவகுத்துச் சென்ற காட்சி கண்கொள்ளாக் காட்சி!

1 5