பக்கம்:குயில்களும் இளவேனில்களும்.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ாடிக்கத் தொடங்கியதும் சட்டென்று சுரதா என் உள்ளத் தில் வந்து நின்றார். கவிதை உத்தியிலும், சிந்தனைப் போக்கிலும் சுரதாவுக்கும் ஆங்கிலக் கவிஞர்களுக்கும் சில ஒற்றுமைகள் இருப்பதைப் படிக்கப் படிக்கப் புரிந்து கொண்டேன்.

மெய்விளக்கக் கவிதைகளில் எனக்கு ஈடுபாடு ஏற்பட்டதும் அக்கவிதைப் பண்புகளைப் பற்றியும், அவற்றைப் படைத்த கவிஞர்களின் வரலாறு பற்றியும் விரிவாக அறிந்துகொள்ள வேண்டும் என்ற ஆர்வம் ஏற்பட்டது. மெய் விளக்கக் கவிதை பற்றிய திறனாய்வு நூல்களைப் படிக்கத் தொடங் கினேன். சுரதாவின் கவிதைப் பாணி தோன்றுவதற்குரிய காரணங்கள் பற்றியும், மாறுபட்ட அவர் கவிதை உத்தி கள் பற்றியும் சிந்தித்தபோது, என் உள்ளத்தில் சில பொருத்தமான கருத்துக்கள் தோன்றின. அக்கருத்துக் களைத் தமிழ்க் கவிதை விரும்பிகளோடு பகிர்ந்து கொள்ள லாம் என்ற நோக்கோடு இக்கட்டுரையை எழுதுகிறேன்.

முதலில் சுரதாவின் கவிதைப் பாணி தோன்றுவதற்குரிய காரணங்களை ஆராய்வோம். பாரதி பாரதிதாசன் காலத்தில் விருத்தப்பாக்கள் மறுமலர்ச்சியுற்றன. பாரதி தாசன் எண்சீர் விருத்தங்களை மிகவும் ஆற்றலோடு கையாண்டார்.

சுரதாவின்

கவிதைப்

ium 5কতা"

விருத்தத்தில் வெற்றிபெற்றான் கம்பன்; அந்த வெற்றியினை இவர்பெற்றார் என்னைப் போல

தடைநடையே அவரெழுத்தில் இல்லை; வாழைத் தண்டுக்கா தடுக்கின்ற கணுக்கள் உண்டு?

47