பக்கம்:குயில்களும் இளவேனில்களும்.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாரதியும். பாரதிதாசனும் வசன கவிதைகள் எழுதியிருக், கிறார்கள். அவர்களைப் பின்பற்றிச் சுரதாவும் எச்சில் இரவுகள்' என்ற பெயரில் வசன கவிதைத் தொடர் ஒன்று எழுதினார். எச்சில் விஷயமானாலும் கவிதைக்குரிய செறிவும், நயமும் சுரதாவின் படைப்பில்தான் காணப்படு கின்றன. இது ஒரு புதுமையான முயற்சிதான்; ஆனால் அதை அரைகுறையாக நிறுத்திவிட்டார்.

இவருடைய சொல்விளக்கப் பாடல்கள் புதுமையான் முயற்சி. அவ்வப்போது தமது மூளையில் குவித்து வைத் திருந்த பலதரப்பட்ட செய்திகளையும் இச்சொல்விளக்கப் பாடல்களில் கொட்டிக் குவிக்கிறார். அவருடைய விசால மான அறிவை இப்பாடல்கள் வெளிச்சம் போட்டுக் காட்டு கின்றன. எப்போதும் இருப்பவர்கள், துன்பத் துறைமுகம், ஆராய்ச்சி என்ற தலைப்பில் பாடப்பட்ட கவிதைகளும் இவ்வகையைச் சார்ந்தவை.

ஆங்கில நாட்டு மெய் விளக்கக் கவிஞர்கள் காதலையும், பக்தியையுமே தமது முக்கியமான கருப் பொருளாகக் கொண்டனர். கவிஞர் சுரதா நாத்திகக் கவிஞரான பாரதிதாசன் வழியில் வந்தவர் ஆகையால், பக்தித் துறையை அவர் தீண்டவில்லை; காதலையே தமது கருப் பொருளாகக் கொண்டார். காதலைப் பா டு வ தி ல் சுரதாவுக்கு விருப்பம் அதிகம்; அதை நுட்பமாகப் பாடுவதில் சுரதாவுக்கு இணை சுரதாவேதான்.

காதலையும் பக்தியையும் தமது கவிதைக்குரிய கருப் பொருளாக மெய்விளக்கக் கவிஞர்கள் கொண்டாலும், அன்றாட அரசியல், சமூகநிலை, நடைமுறை வாழ்க்கை யில் தட்டுப்படும் சின்னஞ்சிறு நிகழ்ச்சிகள் ஆகியவற்றை யும், சுவையான கவிதைகளாக மாற்றினர். சுரதா பத்திரிகைச் செய்திகளையும் நெய்தசெய்திகள் என்ற

53