பக்கம்:குயில்களும் இளவேனில்களும்.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாரசீகக் கவிஞன் ஒமர்கய்யாம் எழுதிய ருபாயியாத் தை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த பிட்ஜரால்டு, மூன்றுமுறை திருத்தம் செய்து வெளியிட்டான். சுரதாவும் ஒரு திருத்தப் பிரியர். அவருடைய பாடல்கள் பலமுறை திருத்தம் பெற்று, வெவ்வேறு பத்திரிகைகளில் வெளிவரும். ஏன் என்று காரணம் கேட்டால், திருத்தம் என் அறிவு முதிர்ச் சிக்கு அத்தாட்சி' என்று கூறுவார். சில திருத்தங்கள் சிறப்பாக இருக்கும். சில திருத்தங்கள் "ஐயோ! இப்படிச் செய்துவிட்டாரே!” என்று நாம் வருந்தும்படி இருக்கும்.

சுரதா தம் மூளையில் குவிந்து கிடக்கும் பழைய சரக்கு களைக் கொட்டிக் குவிப்பதற்கென்றே சில பாடல்களை எழுதுவதுண்டு. அவை அவ்விடத்திற்கு வேண்டாத செய்தி களாகக்கூட இருக்கலாம். அவற்றைப் பொருத்தமில்லாத Luqiu Guifang ust 5' (Combination of dissimilar Images) பாடலில் கொண்டுவந்து நிறுத்துவார். அவை பாடலின் சுவையைக் கெடுப்பதோடு, கருத்துத் தெளிவையும் கலக்கி விடும்.

சோழமென்றால் சூரியனாம்; அதனால் அன்றோ

சூரியன்போல் சிறந்தோனைச் சோழன் என்றார் ஆழமென்று கண்டறிந்த கார ணத்தால்

அலைகடலை ஆழியென்றார்; உங்கட் கெல்லாம் வேழமென்றால் தெரியாதா? பெண்க ளோடு

விளையாடும் என்மகனா வேழம்? சான்றோர், ஈழமென்றால் கள்கென்பர்; செம்பொன் என்பர்;

என்மகனைப் பொன்னென்றா சொல்லுகின்றீர்?

ஒழுக்கமில்லாமல் திரிந்த தன் மகன் கிள்ளியைச் சோழன் தித்தன் இவ்வாறு விமர்சிக்கிறான். சோழம், வேழம், ஈழம், ஆழம் என்ற நான்கு சொற்களின் நிகண்டு விளக்க மாக இப்பாடல் விளங்குகிறதே தவிர, எடுத்துக் கொண்ட பாத்திர விளக்கமாக (Characterization) இல்லை.

77