பக்கம்:குயில்களும் இளவேனில்களும்.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இயல் இசை நாடக வித்தகர்கள் அத்துணை பேரும் கடற் கரைக் கூடாரங்களையும், சுற்றுப்புறத் தங்கல் மனை களையும் மொய்த்துக் கொண்டிருந்தனர்.

கவிஞர்களாகிய எங்களுக்கு வைத்தீஸ்வரன் கோவிலில், ஒரு தங்கல் மனையில் அறைகள் ஏற்பாடு செய்யப் பட்டிருந்தன. கவிஞர் சுரதாவும் கொத்தமங்கலம் சுப்புவும் எனக்கு முன்பாகவே அங்கு வந்து தங்கியிருந்தனர். கவிஞர்களின் உபயோகத்துக்காக ஒரு தனிக் காரும் வழங் கப்பட்டிருந்தது. கவிஞர் சுரதா ஒர் உரையாடல் மன்னர் (Conversationist) ஓயாமல் விடிய விடியப் பேசுவார். சுரதா இரவுக்கும்', 'முதலிரவுக்கும் சுவையில் அதிக வேறுபாடில்லை. சங்க இலக்கியம் முதல் சண்முகம் பட்டணம் பொடி வரை அன்று சரளமாகப் பேசினார் சுரதா, நேரம் போனது தெரியவில்லை.

பூம்புகார் விழாவில் கவியரங்கத் தலைமை கண்ணதாச னுக்கா சுரதாவுக்கா என்பதில் நிகழ்ச்சி அமைப்பாளர் களிடையே பெரிய குழப்பம். கடைசியில் கவியரங்கத் தலைமை க ண் ண த | ச னு க் கு க் கொடுக்கப்பட்டது. தமிழறிஞர் கி. வா. ஜ. த ைல ைம யி ல் நடைபெற்ற வரலாற்றுக் கருத்தரங்கில் பலருள் ஒரு பேச்சாளராக முதல்நாள் நிகழ்ச்சியில் சுரதா இடம் பெற்றார். தம்மை ஒதுக்கிவிட்டார்கள் என்று சுரதா கருதிவிடக் கூடாதே என்பதற்காகக் கொடுக்கப்பட்ட ஆறுதல் பதவி அது, சுரதாவுக்கு அதில் வருத்தந்தான்; உறுமிக் கொண்டே இருந்தார்.

இரண்டாம் நாள் விழா நிகழ்ச்சிகளைக் காண நானும் சுரதாவும் புறப்பட்டோம். டாக்டர் மு. வரதராசனார் தலைமையில் சிலப்பதிகாரப்பட்டிமண்டபம் நடைபெற்றுக் கொண்டிருந்தது. நானும் சுரதாவும் பார்வையாளர்

79