பக்கம்:குயில்களும் இளவேனில்களும்.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுரதாவின் கவிதைப் பாணி சற்றுக் கடினமான ஒன்று. எல்லாராலும் எளிதில் பின்பற்ற முடியாத ஒன்று. ஆழ்ந்து, அகன்ற கல்வியறிவும், நுட்பமான கற்பனை யாற்றலும், சிந்திக்கும் திறனும் உள்ளவர்களே சுரதாவின் கவிதைப் பாணியில் வெற்றி பெறமுடியும். எனவே சுரதாவைப் பின்பற்றி எழுதியவர்களை விரல்விட்டு எண்ணி விடலாம். ஆங்கிலக் கவிதையுலகில் கூட, மெய்விளக்கக் கவிஞர்கள் ஒரு நூற்றாண்டுக் காலம்தான் ஆதிக்கம் செலுத்தினர். அவர்களுள் ஐந்தாறு கவிஞர்களே குறிப்பிட்டுச் சொல்லக் கூடியவர்கள்.

தமிழகத்தில் சுரதாவை பின்பற்றி எழுதிய கவிஞர்களுள் குறிப்பிடத்தக்கவர்கள் நான், பனம்பாக்கம் சீத்தா, பொன்னி வளவன், நன்னியூர் நாவரசன், எழில்முதல்வன், புதுமைவாணன் ஆகியோர். எழில்முதல்வன் இருபது ஆண்டுகளுக்கு முன்பே கவிதை எழுதுவதை விட்டு விட்டார். அவருடைய துவக்க கால வளர்ச்சி விறுவிறுப் பாக இருந்தது. ஏன் கவிதைத் துறையை விட்டு ஒதுங்கி விட்டார் என்பது புரியவில்லை. பொன்னி வளவன் நல்ல விளம்பரத்தோடு வளர்ந்தார். அவருடைய படைப்புக் களும் நூல்களாக வெளி வந்துள்ளன. கவியரங்க மேடை களில் அவர் கவனம் திரும்பிவிட்டது. கவிதைத் துறை யின் தற்காலப் போக்கையொட்டி, சுரதா பாணியிலிருந்து நானும் திசை திரும்பிவிட்டேன். நன்னியூர் நாவரசன், பனம்பாக்கம் சீத்தா ஆகியோரின் கவிதைகள் விட்டு விட்டுச் சிறு தூறல்களாகப் பெய்து கொண்டிருக்கின்றன. GJ großgör søsterogli Lurrowf (The School of Suradha Poetry) அவரோடு முடிந்து விடும். ஆனால் அவரது பாணி கவிதைத் துறையில் பல புதிய வாயில்களைத் திறந்து விட்டிருக்கிறது. சொல்வதைப் புதுமையாகச் சொல்ல வேண்டும் என்ற எண்ணத்தை இளைஞர் உள்ளத்தில்

&5