பக்கம்:குயில்களும் இளவேனில்களும்.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

'கற்பனை என்பது அறிவியல் அடிப்படையில் அமைந்த பேராற்றல். பேரண்டத்தின் ஒழுங்கையும் இயக்கத்தையும் கற்பனை ஆற்றலால்தான் உணர முடியும்' என்று போதலேர் கு றி ப் பி ட் டா ர். ஸ்வீடன் பர்க்கும், ஆலன்போவும் இதே கொள்கையுடையவர்கள்.

போதலேர் ஒர் ஐயுறவாளர் (Sceptic). கற்பனை ஒரு பேராற்றல் என்று குறிப்பிட்டாலும், அது கை கொடுத்து உதவாத சில நேரங்களில் அதன் மீது அவருக்கு ஐயுறவு ஏற்பட்டது. அந்த நேரங்களில் கற்பனைக்கு ஊக்கம் கொடுப்பதற்காக மதுவையும், கஞ்சாவையும் நாடினார். அவற்றின் துாண்டுதலால் ஒரு செயற்கைச் சொர்க்கத்தை அவரே படைத்துக்கொண்டு அதில் திளைத்தார்.

போதலேர் கடவுட்பற்றோ, மதப்பற்றோ இல்லாதவர். என்றாலும் அவர் உள் ளத் தி ல் படிந்துவிட்ட சமயக் கருத்துக்கள் சிலவற்றை அவரால் உதற முடியவில்லை, கிறித்தவ சமயக் கொள்கைப்படி, மனிதன் பாவியாகவே இருக்கிறான் என்ற உணர்வும், ஆதாமும் ஏவாளும் பாவம் செய்வதற்குமுன் வாழ் ந் த ஏதேன் என்ற சொர்க்கத்தை மனிதன் மீண்டும் அடையமுடியாது என்ற உணர்வும், இவ்வுலகின் துன்பமாகிய கோரப்பிடியிலிருந்து விடுபடமுடியாது என்ற உணர்வும் போதலேரை ஆட்டிப் படைக்கின்றன. இத்துன்ப உலகின் பிடியிலிருந்து விடு பட்டுத்தன் ஆன்மாவைப் பரவசப் படுத்துவதற்காக, அவரே படைத்துக் கொண்டது தான் செயற்கைச் சொர்க்கம் ! .

போதலேரின் நச்சுப் பூக்கள் மூன்று கொத்தாக மலர்ந் திருக்கின்றன. முதல்கொத்து அவர் உளச்சோர்வையும், இரண்டாவது கொத்து பாரிஸ் நகரக் காட்சிகளையும், மூன்றாவது கொத்து .ெ ச ய ற் ைக ச் சொர்க்கத்தை

92