பக்கம்:குயில் ஒரு குற்றவாளி.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

12


கறையாய்ப் படிந்த பாவமெலாம் 
  கங்கை நீரின் புனிதத்தால்

மறைந்து போகும்; முன்னோரும்

  மகிழ்வார்"என்றான்முதியோனே.

"ஒகோ! ஒகோ! என்றவரும்

  உடனே மேற்குத் திசைநோக்கி

வேக வேக மாய் இறைத்தார்

  விரிந்த கங்கை நீரள்ளி.

"ஐயா நீரும் இறைக்கின்றீர்

  ஆற்று நீரை மேற்றிசையில்

மெய்யாய் உமது கருத்துரைக்க

  வேண்டும்"என்றான் முதியோனே.

"பத்துக் கல்லில் மேற்றிசையில்

 பச்சை வயல்ஒன் றெனக்குண்டு 

வித்திட்ட டிருக்கும் பயிர்களுக்கே

 விரைவாய் நீரைப் பாய்ச்சுகின்றேன்".

என்றார் நானக். முதியவனோ

 "ஏஏ மூடா! வேடிக்கை      

அன்றோ நினது செயல்?" என்றான்

  அறிஞர் அவரை நகைசெய்தான்.

"ஆற்று நீரைக் கையாலே

  அள்ளி இறைத்தால் தூரத்துச் 

சேற்று வயலுக் கெவ்வாறு

  செல்லும்?" என்று கேட்டானே,