பக்கம்:குயில் கூவிக்கொண்டிருக்கும்.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

D. முருகுசுந்தரம்/l 11

இதைப்பற்றிப் பெரிசா அலட்டிக்கறிங்க...மலஜலங் கழிக் கற மாதிரி இது உணர்ச்சிக்கு ஒரு கழிவாய்!” என்று ஒரு போடு போட்டார். இந்த நாட்டில் அகமும் புறமும் படித்த எந்தத் தமிழாசிரியனும் துணிந்து இதைச் சொல் லப் பயப்படுவான்.

இவரிடத்தில் உள்ள ஓர் ஆபூர்வ குணத்தைக் கவனித் திருக்கிறேன். பெரியார் ஒருவருக்குத்தான் இவர் கையெடுப்பார்; பெரியார் வந்தால் ாடி வரவேற் பார். மற்றவர் கையெடுத்தால்தான் இவர் எடுப்பார். இதைப் பலமுறை கவனித்த நான் ஒரு நாள் ஏன்’ என்று கேட்டேன். 'எனக்குத் தலைவர் பெரியார்தான்" என்று சொன்னார். அறிஞர் அண்ணாவையே பாவேந் தர் மிகவும் சாதாரணமாக மதித்தார்.

'பெரியாரும் அண்ணாவும் இரண்டு பெரும் தமிழர் கள்' என்பார். பெரியார் எதைச் சேர்த்தாலும் தமிழ னுக்குத்தான் கொடுப்பார். இந்த யானைக்கு (பெரி யாருக்கு) ஈடு யார்?’ என்பார்.

'பார்ப்பனியம் இந்த நாட்டின் நச்சுப்பாம்பு’’ என்று பெரியார் அடிக்கடி சொல்லுகிறார். நீங்கள் பாரதி யைப் போற்றும் காரணம் என்ன?’ என்று ஒரு நாள் கேட்டேன்.

'பாரதியிடத்தில் பார்ப்பனத்தன்மை எள்ளளவும் கிடை யாது. "பார்ப்பானை ஐயரென்ற காலமும் போச்சே!” என்று பெரியாருக்குமுன் முரசு கொட்டிச் சொன்னவன் பாரதி. நான் புரட்சிக் கவிதைகள் எழுதக் கற்றுக் கொண்டதே அவரிடம்தான். என்னை முதன் மூதலில் மனமுவந்து பாராட்டியவரும் அவரே; விளம்பரப்படுத் தியவரும் அவரே. என் கவிதையை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து இந்து நாளேட்டில் வெளிவர ஏற்பாடு செய்தார். இந்தக் காலத்தில் எந்தப் பார்ப்பான் நமக்கு இப்படி உதவி செய்வான்? அதனால் தான் நான் பாரதி