பக்கம்:குயில் கூவிக்கொண்டிருக்கும்.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

| 12|குயில் கூவிக்கொண்டிருக்கும் <!

யாரைப் போற்றுகிறேன்; பாரதிதாசன் என்று புனை பெயரும் வைத்துக் கொண்டேன்’ என்று உணர்ச்சி வசப்பட்டுப் பேசினார்.

ஒருமுறை சேலம் கோயம்புத்துரர் லாட்ஜில் பாவேந்தர் தங்கியிருக்கிறாள் என்று கேள்விப்பட்டு அவரைப் பார்க் கச் சென்றேன். நாங்கள் அறையில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தபோது கோவைப் பட அதிபர் ஜூபிடர் சோமு திடீரென்று உள்ளே வந்தார். தாம் எடுக்கும் திரைப்படத்துக்கு உடளே பாடல் ஒன்று வேண்டுமென் றும் இப்போதே எழுதித்தர முடியுமா என்றும் கேட்

டார்.

  • ஏ எழுதாம...? Sequence சொல்லு!’ என்றார் பாவேந்தர், பாடல் இடம்பெறும் சந்தர்ப்பத்தைச் சோமு சொன்னதும் சரியாகப் பத்து நிமிஷத்தில் பாட்டை எழுதிக் கையில் கொடுத்துவிட்டார். உடனே ரூ. 1000/-க்குச் செக் ஒன்று கொடுத்துவிட்டுப் பாடலை வாங்கிச் சென்றார் ஜூபிடர் சோமு. நான் மலைத்துப் போனேன்.

ஒருமுறை பொங்கல் சமயத்தில் தருமபுரிச் சுற்றுப் பய ணம் வந்திருந்தார் பாவேந்தர். பொங்கல் நாளன்று பென்னாகரம் வரும்படி அழைத்தேன். அவரும் அழைப்பை ஏற்று வந்தார். அவர் விரும்பும் உணவு வகைகளைச் சமைத்து விருந்து வைத்தேன். அவரும் மகிழ்ச்சியோடு உண்டார். பிறகு என்னைப் பாராட்டி 'அஞ்சாத நஞ்சையா’ என்று கவிதை எழுதினார். ஊருக்குத் திரும்பும்போது கடத்தை மானின் உப்புக் கண்டம் நான்கைந்து படி ஒருபையில் போட்டுக் கொடுத் தேன்; அதை எடுத்துச் சென்றார்.

பாரதிதாசன் இந்த நூற்றாண்டில் பெரிய மேதைகளில் குறிப்பிடத்தக்கவர். அவருடைய நட்பு என் வாழ்வில் கிடைத்த அரும்பேறு.