பக்கம்:குயில் கூவிக்கொண்டிருக்கும்.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மொழிபெயர்க்கப்பட்டால், பாவேந்தர் வர லாறு உலக இலக்கிய வாதிகளின் நெஞ்சில் நிலையான இடத்தைப் பெறும் என்பதில் சிறிதும் ஐயமில்லை.

பாவேந்தர் வாழ்க்கையில் உணர்ச்சிமயமான எவ்வளவோ செய்திகளை எழுதும்போது, இடையிடையே அவரைப் பற்றிய மிகச் சாதாரணமான செய்திகளையும் எழுதியிருக் கிறேன். அவை அற்பமானவை என்றாலும் அவற்றை விட்டு விட எனக்கு விருப்ப மில்லை. கவிதை எழுதும் போது காற்புள்ளி யும் அரைப்புள்ளியும் இல்லாமல் எழுத முடி கிறதா?

பாவேந்தரைப் பற்றி வரலாற்று நூல்களும் நிறைய வரவேண்டும்; திறனாய்வு நூல் களும் வரவேண்டும். மேலை நாட்டார் கவிதை புற்றியும், கவிஞர் பற்றியும் புதுப்புது முறைகளில் வகுத்தும் தொகுத்தும் எழுதி வெளியிடும் நூல்கள் அளவற்றவை; அமைப் பாலும் உள்ளடக்கத்தாலும் நம்மைவியப்பில் ஆழ்த்தக் கூடியவை. அவற்றைப் பார்க்கும் போதும் படிக்கும் போதும் தமிழில் இத் தகைய நூல்கள் வெளியாகும் காலம் வருமா என்று நான் ஏக்கப் பெருமூச்சு விடுவதுண்டு.

ஒரு கவிஞன் இறந்துஇருபத்தைந்து ஆண்டு களுக்குள் அவனைப்பற்றிய வரலாறுகள் எல்லாம் எழுத்தில் வந்து விட வேண்டும். ஏனென்றால் இருபத்தைந்து ஆண்டுகளுக் குள் அக்கவிஞனோடு நெருங்கிப் பழகிய தலைமுறை மறைந்து விடும். அதன்பிறகு எழுதப்படும் நூல்களுள் புனைந்துரை இடம் பெற்று விடும். கவிஞன் அவதார புருஷன்” ஆகிவிடுவான்; நாக்கில் எழுதக் காளி, தேவி யும் வந்து விடுவாள்.

பாவேந்தர் வாழ்ந்த புதுவை பிரெஞ்சுப் பண்