பக்கம்:குயில் கூவிக்கொண்டிருக்கும்.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

C. முருகுசுந்தரம்/83

பிறகு எங்கள் குடும்பம் கானாடு காத்தானிலிருந்து குடி பெயர்ந்து திருவானைக்காவலில் கொஞ்ச நாள் தங்கி யது. அப்போது பாவேந்தர் குடும்பத்தோடு வந்திருந்து எங்களுடன் தங்கியிருந்தார். கண்ணப்பரும் சரசுவதி யும் வந்திருந்தனர். அந்தச் சமயத்தில் தான் பாவேந் தருக்குத் திருச்சியில் மணி விழா எடுக்கும் முயற்சி நடை பெற்றது. ஆனால் நடுவில் சில குழப்பங்கள் ஏற்பட்டுச் சிறிய அளவில் திருவானைக்காவல் சத்திரம் ஒன்றில் 30-4-1951 இல் அவ்விழா எடுக்கப்பட்டது.

திருவானைக் காவலிலிருந்து எங்கள் குடும்பம் மீண்டும் கானாடு காத்தானுக்குத் திரும்பியது. எங்கள் வாழ்க் கையில் ஏற்பட்ட நொடிப்புகள், துன்பங்கள் எங்களை இன்ப நிலையத்திலிருந்து வெளியேற்றின. எனது பொது வாழ்க்கை ஈடுபாடு குறைந்தது. பாவேந்த ருடைய தொடர்பும் குறைந்தது. அன்புக்குரிய என் கணவரையும், தகுதி மிக்க தமிழ்த்தமையனையும் பிரிந்து தனித்திருக்கும் இவ்வேளையில்,அவர்களுடைய பழைய நினைவுகள் என் கண்களை அடிக்கடி பனிக்கும் படி செய்கின்றன. என் வாழ்க்கையில் நான் சந்தித்த இரண்டு பெரிய மேதைகளுள் ஒருவர் பெரியார்; மற் றொருவர் பாவேந்தர்.