பக்கம்:குயில் கூவிக்கொண்டிருக்கும்.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

96/குயில் கூலிக்கொண்டிருக்கும் <!

  • எட்டைய புரத்தில் பாரதிக்கு மணிமண்டபம் திறக்கப் பட்டது. ஜெமினிகணேசன் என்ற நடிகர் முன்னாலி ருந்து அவ்விழாவை நடத்தினாராம். இந்த நாட்டில் நான்தான் பாரதியின் இலக்கிய வாரிசு. எனக்கும் அழைப்பில்லை; பாரதியின் மகளுக்கும் அழைப்பில்லை. பாரதியின் தங்கை, மகள், மனைவி-இவர்களுக்குக்கூட விழாப்பந்தலுக்குள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டது. மிகவும் முயன்று தான் அவர்கள் உள்ளே சென்றிருக்கி றார்கள்’’ என்று காட்டமாகப் பேசினார்.

மறுநாள் நாராயண குப்பத்தில் தி. க. தோழர் கெங்கப் பன் மகளுக்கு இவர் தலைமையில் திருமணம் நடை பெற்றது. மணமக்களுக்கு அறிவுரை, அறிவுரை வழங் கியதோடு கடவுளைப் பற்றியும் 1; மணி நேரம் பேசி னார். அப்போது ஆஸ்திகம்-நாஸ்திகம் பற்றி அவர் சொன்ன விளக்கம் எனக்கு நினைவுக்கு வருகிறது.

"ஆஸ்தி என்றால் செல்வம்; நாஸ்தி என்றால் அழிவு. பொருளை வீணடிக்காமல் காப்பவன்.ஆஸ்திகன்.ஆண்ட வன் பேரால் பால், தயிர்,நெய், தானியம் ஆகியவற்றை அவிர்ப்பாகம் என்று தீயில் கொட்டி நாசம் செய்பவன் நாஸ்திகன். காலப்போக்கில் இக்கருத்து எதிரெதிராகத் திருத்தப்பட்டுவிட்டது. உந்து வண்டி நிலையத்தில் மூட்டை சுமப்பவன் பேருந்திலிருந்து இறங்கும் மக்க ளைப் பார்த்துக் கூலிகூலி' என்று கத்துகிறான். வெளி நாட்டுக்காரன் இதை எதிரிலிருந்து பார்த்தால் என்ன நினைப்பான்? வண்டியிலிருந்து இறங்குபவர்களைத் தான் கூலி' என்று பெயரிட்டுக் கூப்பிடுவதாக நினைப் பான். ஆஸ்திகம் நாஸ்திகமானது இதைப் போலத்தான் நூற்றுக் கணக்கான டின் எண்ணெயையும் நெய்யையும் ஊற்றி நாஸ்தி செய்து கார்த்திகைத் தீபம் கொளுத்து பவன் தான் நாஸ்திகன்’ என்றார் அவர்.

அத்திருமணத்தில் குடும்பக்கட்டுப்பாட்டை வற்புறுத்