பக்கம்:குயில் பாட்டு-ஒரு மதிப்பீடு.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குயில்பாட்டு:ஒரு மதிப்பீடு 93 நகைப்பு சிருங்காரத்திலிருந்து பிறந்ததாகப் பரத முனிவர் கூறுவார். உவகை தகுதியற்ற இடத்தில் இருந்து விட்டால் அது நகைப்பிற்கு ஏதுவாகின்றது. காதல் என்பது ஆண்-பெண் என்ற இரண்டு பேர்கட்கும் பொதுவானது. அஃது ஒருவரோடு மட்டும் நின்றால் நகைப்பினை ஊட்டா மல் எப்படி இருக்க முடியும்? சீதாப்பிராட்டியை இராவணன் அசோக வனத்தில் வைத்துத் துன்புறுத்தினான்; தேவி அவனைத் திரும்பியும் பார்க்கவில்லை. புல்லினும் அற்பனாக நினைத்து அவனைப் புறக்கணித்தாள். இந்நிலையில் ஆசையை ஊட்டும் அவனது காதல் மொழிகள் பரிகாசத் தையே விளைவித்தன; நிகழ்ச்சியைப் படிக்கும் நம்மால் நகைக்காமல் இருக்க முடியவில்லை. ஆயினும், இருக்கவேண் டிய நிலை தவறியிருக்குமானால் எதிலிருந்தும் நகைச்சுவை விளையக்கூடும் என்றிருக்கும்பொழுது சிருங்காரம் அல்லது உவகையிலிருந்தோ ஹாஸ்யம் அல்லது நகைச்சுவை விளை கின்றது என்று கூறிய பரதமுனிவரின் உள்ளத்தில் ஏதோ ஆழ்ந்த கருத்து இருக்க வேண்டும். ‘குயில்பாட்டு க்கு வருவோம். குரங்கினிடமும் மாட்டி னிடமும் குயில் பேசும் காதல் மொழிகளிலும், குரங்கின் சேட்டைகளிலும், நகைப்புக் கூறுகளை அநுபவித்து மகிழ லாம். குயில் பேசுகின்றது. -வானரரே! ஈடறியா மேன்மையழ கேய்ந்தவரே! பெண்மைதான் எப்பிறப்புக் கொண்டாலும், ஏந்தலே! நின்னழகைத் தப்புமோ? மையல் தடுக்கும் தரமாமோ? மேனியழகினிலும் விண்டுரைக்கும் வார்த்தையிலும் கூனி யிருக்கும் கொலுநேர்த்தி தன்னிலுமே,