பக்கம்:குயில் பாட்டு-ஒரு மதிப்பீடு.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

§§ குயில்பாட்டு:ஒரு மதிப்பீடு வானரர்தஞ் சாதிக்கு மாந்தர்நிகர் ஆவரோ? ஆன வரையும் அவர்முயன்று பார்த்தாலும் பட்டுமயிர் மூடப் படாத தமதுடலை எட்டுடையால் மூடி எதிருமக்கு வந்தாலும் மீசையையும் தாடியையும் விந்தைசெய்து வானரர்தம் ஆசை முகத்தினைப்போ லாக்க முயன்றிடினும் ஆடிக் குதிக்கும் அழகிலுமை நேர்வதற்கே கூடிக் குடித்துக் குதித்தாலும், கோபுரத்தில் ஏறத் தெரியாமல் ஏணி வைத்துச் சென்றாலும், வேறெத்தைச் செய்தாலும் வேகமுறப் பாய்வதிலே வானரர்போ லாவரோ? வாலுக்குப் போவதெங்கே? ஈனமுறுங் கச்சை இதற்கு நிகராமோ? பாகையிலே வாவிருக்கப் பார்த்ததுண்டு, கந்தைபோல் வேகமுறத் தாவுகையில் வீசி எழுவதற்கே தெய்வங் கொடுத்த திருவாலைப் போலாமோ? சைவ சுத்த போசனமும் சாதுரியப் பார்வைகளும் வானரர்போற்சாதியொன்றுமண்ணுலகின்மீதுளதோ?* என்று குயில் வானரத்திடம் பேசும் பேச்சிலும், மனிதனைக் காட்டிலும் குரங்கின் பெருமையை உயர்த்திக் கூறும் போக்கி லும் நகைச்சுவை கொப்புளித்தெழுவதைக் காணலாம். அதன்பிறகு 'நீசக் குயிலும் நெருப்புச் சுவைக் குரலில், ஆசை ததும்பி அமுதுநூறப்' பாடுகின்றது. குயில் பாடிய இன்னிசைப் பாட்டில் மனத்தைப் பறி கொடுத்த குரங்கு செய்யும் சேட்டைகள்: வற்றற் குரங்கு மதிமயங்கிக் கள்ளினிலே முற்றும் வெறிபோல் முழுவெறிகொண் டாங்ங்னே தாவிக் குதிப்பதுவும் தாளங்கள் போடுவதும் 'ஆவி புருகுதடி, ஆஹாஹா' என்பதுவும் கண்ணைச் சிமிட்டுவதும், காலாலும் கையாலும் மண்ணைப் பிறாண்டியெங்கும் வாரியிரைப்பதுவும் 10. கு பா:5. குயிலும் குரங்கும் - அடி (21-47)