பக்கம்:குயில் பாட்டு-ஒரு மதிப்பீடு.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குயில்பாட்டு:ஒரு மதிப்பீடு 95

  • ஆசைக் குயிலே! அரும்பொருளே! தெய்வமே !

பேச முடியாப் பெருங்காதல் கொண்டுவிட்டேன், காதவில்லை யானாற் கணத்திலே சாதலென்றாய்! காதலினாற் சாகுங் கதியினிலே தன்னைவைத்தாய் எப்பொழுதும் நின்னை இனிப்பிரிவ தாற்றுகிலேன் இப்பொழுதே நின்னை முத்தமிட்டுக் களியுறுவேன்' என்று பல பேசித் தன் ஏக்கத்தைப் புலப்படுத்துவதிலும் நகைச்சுவை ததும்பி வழிகின்றது. வயிறாரப் புல்லை மேய்ந்து மேய்ந்த புல்லை அசைபோடு வதைத் தவிர வேறொன்றும் அறியாமல் பொதிபோல் பருத் துக் குயிலின் காதல் மொழிக்கு யாதொரு மறு மொழியும் சொல்வதற்கு அறிவில்லாத கிழ எருதைக் குயில் நேசித்து அதனிடம் தன் ஆசை மொழிகளைப் புகல்வதைக் கேட்கும் போது நாம் வாய்விட்டுச் சிரிக்கின்றோம். குயிலின் காதல் பேச்சு: 'நந்தியே, பெண்டிர் மனத்தைப் பிடித்திழுக்கும் காந்தமே! காமனே! மாடாகக் காட்சிதரும்! மூ tத் தியே! பூமியிலே மாடுபோற் பொற்புடைய சாதியுண்டோ? மானுடருந் தம்முள் வலிமிகுந்த மைந்தர்தமை மேனியுறுங் காளையென்று மேம்பா டுறப்புகழ்வார் காளையர்தம் முள்ளே கனமிகுந்தீர் ஆரியரே! நீள முகமும் நிமிர்ந்திருக்கும் கொம்புகளும், பஞ்சுப் பொதிபோல் படர்ந்த திருவடிவும் மிஞ்சுப் புறச்சுமையும், வீரத் திருவாலும், வானத் திடிபோல் 'மாவென் றுறுமுவதும், ஈனப் பறவை முதுகின்மிசை ஏறிவிட்டால் வாலைக் குழைத்து வளைத்தடிக்கும் நேர்மையும், பல் காலம்நான் கண்டு கடுமோக மெய்திவிட்டேன் ** என்று எருதின் எழிலுக்குக் கவிபாடித் தன்னை அடியாளாக ஏற்றுக்கொள்ள வேண்டுகின்றது; தனக்கு அந்தப் பேறு 11. ஷ்ெ. டிெ. அடி(59.70) 12. டிெ. குயிலும் மாடும்-அடி(15.28)