பக்கம்:குயில் பாட்டு-ஒரு மதிப்பீடு.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இயல்-5 பாட்டில் இயற்கை எழில் இயற்கைப் பொருள்கள் இன்பமயமான சமாதியில் அடங்கிக் கிடக்கின்றன. அவைகளுக்கு நம்முடன் பேசுவது கூடத் தம் இன்பத்திற்கு இடையூறாகிவிடும். அவைகளின் அமைதி நிலையைக் கலைக்காமலிருப்பதே நமக்கு அறமாகும் அந்த அமைதியில் நாம் கலந்து கொள்ளவேண்டும். அங்ங்ணம் கலந்து கொள்ளும் இயல்புடையவனே கவிஞன், அவன் இயற்கையோடு பழகுந் திறன் வாய்ந்தவன்; இயற்கையை அவன் தழுவும் முறையே தனித் திறன் வாய்ந் தது. உறங்கும் நிலையில் தாய் குழந்தையை அணை வதைக் நாம் கவனித்திருக்கின்றோமல்லவா? தன் மார்போடு சேர்த்தே குழந்தையைத் தழுவிக்கொள்வாள். என்றாலும் குழந்தையின் உறக்கம் கெடுவதில்லை. அடுத்தக் கணத்தில் அவளும் தன்னை மறந்து கண்ணயர்வாள். அவ்விதமே கவிஞனும் இயற்கையை அதன் இன்ப அமைதி கெடாமல் தழுவுவான்; தன்னையும் உடனே மறந்து விடுவான். இன்பப் பெருக்கில் மிதப்பான்; அதிலிருந்து வெளிவந்தவுடன் இன்ப வெறியிடித்தவன்போல் சில சமயம் பாடுவான்; சில சமயம் ஆடுவான். இவையெல்லாம் கலைகளாகின்றன. அவன் அநுபவித்த இன்பப் பெருக்கில் ஒன்றிரண்டு திவலைகள்