பக்கம்:குயில் பாட்டு-ஒரு மதிப்பீடு.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாட்டில் இயற்கை எழில் 47 பெருநாரை; முனையிடம்-போர் செய்யும் இடம்; செங்கண் காரான்-சிவந்த கண்ணையுடைய எருமை; தொளி - சேறு: சொரிபுறம்-தினவையுடைய முதுகு ; உரிஞ்ச உராய்தலால். புரி ஞெகிழ்பு உற்ற-புரிகள் அறுந்து நெகிழ்தலையுற்ற குமரிக்கூடு - நெற்கூடு: (குமரி-அழியாமை); கருங்கை வினைஞர்-வயலில் செயல்புரிவர், களமர்-உழுகுடி வேளாளர் பாணி-பாடல்; ஏர்மங்கலம் - ஏர்மங்கலப் பாட்டு; முகவை பாடுதல் - பொலி பாடுதல். என்று வருணிப்பர். இந்த இன்னொலிகளைக் கேட்டுக் கொண்டே கோவலனும் கண்ணகியும் கால் கடுக்கும் நடையை மறந்து சென்றனர் என்பது கவிஞர் தரும் குறிப்பு. 'இருளும் ஒளியும் என்ற குயிற் பாட்டின் பகுதியில் காலைப்புனைவைக் காட்டும் கவிஞர் 'காலைக் கதிரழகுன் கற்பனைகள் பாடுகின்றேன்’ என்று தொடங்கி, தங்க முருக்கித் தழல் குறைத்துத் தேனாக்கி எங்கும் பரப்பியதோர் இங்கிதமோ? வான்வெளியைச் சோதி கவர்ந்து சுடர் மயமாம் விந்தையினை ஒதிப் புகழ்வார் உவமையொன்று காண்பாரோ?* இப்படிப் பாடுகின்றார். இப்பாடற் பகுதியில் பாடுதல், ஒதிப் புகழ்தல் செவிப்புலப் படிமங்கள் (Auditory images); உருக்கு தல், பரப்புதல் இவை இயக்கப்புலப் படிமங்கள் (Kinesthetic images); தங்கம், வான்வெளி, சோதி, சுடர் இவைகட்புலப் படிமங்கள் (Visual images) தழல் குறைத்தல் நொப்புலப் படிமம் (Tactual image); தேனாக்குதல் சுவைப் புலப் படிமம் (Gustatory image) இந்த ஐந்து வகைப் படிமங்களும் கலந்த கலவைப் படிமம் எழு ஞாயிற்றின் எழிலைக் கண்டு பழநிப் 15. கு. பா. இருளும் ஒளியும்- அடி (31-34)