பக்கம்:குயில் பாட்டு-ஒரு மதிப்பீடு.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

52 குயில்பாட்டு ஒரு மதிப்பீடு இசையைப்பற்றி இப்படி ஒரு புதுக்கவிதை பேசுகின்றது. மாஞ்சோலையில், குயில், காதல், காதல், காதல், காதல் போயிற், காதல் போயிற், சாதல், சாதல், சாதல். என்று தொடங்கிய குயிலின் பாட்டைக் கவிஞர் 'மோகனப் பாட்டு என்று குறிப்பிடுவர். இதற்குக் காரணம், வேடர் வாராத விருந்துத் திருநாளில் பேடைக் குயிலொன்று பெட்புறவோர் வான்கிளையில் வீற்றிருந்தே ஆண்குயில்கள் மேனி புளகமுற, ஆற்ற லழிவுபெற உள்ளத் தனல்பெருக, சோலைப் பறவையெல்லாம் சூழ்ந்து பரவசமாய்க் காலைக் கடனிற் கருத்தின்றிக் கேட்டிருக்க, இன்னமுதைக் காற்றினிடை எங்கும் கலந்ததுபோல், மின்னற் சுவைதான் மெலிதாய் மிகவினிதாய் வந்து பரவுதல்போல், வானத்து மோகினியாள் இந்தவுரு வெய்தித்தன் ஏற்றம் விளங்குதல்போல் இன்னிசைத் தீம்பாடல் இசைத்திருக்கும் விந்தைதனைக் கவிஞரும் கேட்டு அநுபவித்தவர். இதனால்தான் அந்தக் குயிலை, ......பேரின்பப் பாட்டுடையாய்! ஏழுலகம் இன்பத்தி ஏற்றுந் திறனுடையாய்! என்று விளித்துப் பேசுகின்றார். பாரதிக்கு இசைப் பைத்தியம் உண்டு. இசைக்கு உருகா தார் யாவர்? 2. கு.பா. 1. குயில், அடி (11-21)